மனைவியின் தோழி மீது வந்த ஆசை.. குரலை மாற்றி பேசி பலாத்காரம்.. ஆபாச வீடியோவை பதிவேற்றிய ஜோதிடர்
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் தனது மனைவியின் தோழியை ஏமாற்றி பலாத்காரம் செய்த பிரபல ஜோதிடரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர் செல்போனில் குரலை மாற்றி பேசும் சாப்ட்வேரை பயன்படுத்தி மனைவியின் தோழியை தனியே வரவழைத்து பலாத்காரம் செய்ததும், அதன்பிறகு இருவரும் சேர்ந்து இருப்பதை வீடியோ எடுத்து மிரட்டியதோடு, ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்ட திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
பஞ்சாப் மாநிலம் பாக்வாரா பகுதியில் உள்ள பிரண்ட்ஸ் காலனியை சேர்ந்தவர் அபிசேக் ராவல். இவர் பிரபலமான ஜோதிடர் ஆவார். திருமணமாகி மனைவி உள்ளார். அபிகேசக் ராவலின் மனைவிக்கு ஒரு தோழி இருக்கிறார். அவரது பெயர் ஷீலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
அபிசேக் ராவலின் மனைவியும், ஷீலாவும் மிகவும் நெருங்கிய தோழிகள். இதனால் அவர்கள் 2 பேரின் குடும்பமும் அடிக்கடி சந்தித்து வந்தனர். இதில் ஷீலாவுக்கு கணவர், 3 குழந்தைகள் உள்ளனர். அடிக்கடி நடந்த சந்திப்பால் ஷீலா மீது அபிசேக் ராவலுக்கு ஆசை வந்துள்ளது. ஷீலாவை அவர் தவறான கண்ணோட்டத்தில் பார்க்க தொடங்கினார்.

ஷீலாவிடம் அவர் பேச முயன்றுள்ளார். ஆனால் எங்கே தனது மனைவியிடம் போட்டு கொடுத்து விடுவார் என்ற பயத்தில் அவர் இருந்தார். இதனால் அவர் ஷீலாவிடம் நெருக்கமாக பேச தயங்கி இருந்தார். இந்நிலையில் தான் ஷீலாவிடம் பேச அவர் மாற்று யோசனையை கையில் எடுத்தார். அதாவது செல்போனில் குரலை மாற்றும் சாப்ட்வேரை பயன்படுத்தி அபிசேக் ராவல் தனது மனைவி போல் ஷீலாவிடம் பேசி வந்துள்ளார்.
மேலும் அதே டிரிக்கை பயன்படுத்திய அபிசேக் ராவல் ஷாப்பிங் செய்ய கடைக்கு வரும்படி ஷீலாவிடம் கூறியுள்ளார். தோழி தான் அழைக்கிறார் என்று ஷீலாவும் சென்றார். ஆனால் அங்கு நின்ற அபிசேக் ராவல் மட்டுமே நின்றார். அவரை பார்த்ததும் கேசுவலாக ஷீலா பேசிவிட்டு தனது தோழி எங்கே என்று கேட்டார். அப்போது தோழி வரவில்லை என்று கூறிய அபிசேக் ராவல், அவரை தூக்கி சென்று பலாத்காரம் செய்தார். இதில் ஷீலா மயங்கினார். இதையடுத்து அபிசேக் ராவல் இருவரும் சேர்ந்து இருப்பதை வீடியோ மற்றும் போட்டோவாக எடுத்து வைத்து கொண்டார்.
பிறகு அதனை காண்பித்து மீண்டும் மீண்டும் மனைவியின் தோழியான ஷீலாவை அவர் பலாத்காரம் செய்துள்ளார். அதுமட்டுமின்றி கடந்த ஹோலி பண்டிகையின்போதும் ஷீலாவை தனது ஆசைக்கு இணங்கும்படி கூறி பலாத்காரம் செய்துள்ளார். அதன்பிறகு ஷீலா மறுக்கவே அவரது ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவவேற்றம் செய்துள்ளார். இதனால் அதிர்ந்த ஷீலா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அபிசேக் ராவலை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
அபிசேக் ராவலிடம் இருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது அதில் ஏராளமான பெண்களின் ஆபாச படங்கள் இருப்பது தெரியவந்தது. இதனால் அவர் பல பெண்களை ஏமாற்றி இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதனால் அதுபற்றி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதற்காக அபிசேக் ராவலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications