பெண்ணுக்கு வந்த கோபம்.. கத்தியை எடுத்து வயிற்றில் சொருகி.. அப்படி என்ன கேட்டுட்டார் டிரைவர்?
டிரைவரை கத்தியால் குத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்
சண்டிகர்: ஒரு டாக்சி டிரைவரை, இளம்பெண் திடீரென கத்தியால் குத்தி விட்டு ஓடிவிட்டார்.. பர்தா அணிந்து வந்த பெண்ணை போலீசார் தொடர்ந்து தேடி கொண்டிருக்கிறார்கள்.
ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ளது சைபர் சிட்டி என்ற பகுதி.. இங்குள்ள ஏர்போர்ட்டில் இருந்து ஒரு பெண் வெளியே வந்தார்.. எகிப்து நாட்டை சேர்ந்தவர்.. 30 வயதிருக்கும்.
ஏர்போர்ட்டுக்கு வெளியே ஏராளமான ஆட்டோக்கள், கால் டாக்சிகள் வரிசை கட்டி நின்றிருப்பது வழக்கம்.. வெளியே வரும் பயணிகளை பார்த்ததும், டிரைவர்கள் ஓடிச்சென்று அவர்களை சவாரிக்கு நெருங்குவது வழக்கம்.

பர்தா பெண்
அந்த வகையில், அங்கிருந்த ஒரு டாக்சி டிரைவர் அந்த பெண்ணிடம் வந்து, தன்னுடைய டாக்சியில் வருமாறு அழைத்தார்.. பர்தா அணிந்திருந்த அந்த பெண்ணும் டாக்சியில் ஏறி உட்கார்ந்தார்.. "எங்கே போகணும்" என்று டிரைவர் கேட்டதுதான் தாமதம், அடுத்த நிமிடமே தான் மறைத்து கொண்டு வந்திருந்த கத்தியால் அந்த டிரைவரை சரமாரியாக குத்தினார்.. இதில் நிலைகுலைந்து போன அந்த டிரைவர் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் மயங்கி விழுந்தார்..

டிரைவர்
இதை பார்த்த அங்கிருந்த மற்ற டிரைவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.. அங்கு அவருக்கு தீவிரமான சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது.. டிரைவர் சீரியஸாக இருக்கிறாராம்..,. இதனிடையே தப்பியோடிய அந்த பர்தா அணிந்த பெண்ணை போலீசார் விரட்டி பிடித்துவிட்டனர்.. அவரிடம் விசாரணையையும் ஆரம்பித்தனர்..

எகிப்து மொழி
ஆனால், அவர் எகிப்து மொழியில் பேசுகிறாராம்.. இதனால் விசரணையில் சிக்கல் ஏற்பட்டுவிட்டது.. எனவே, அவரது பேச்சை மொழிபெயர்க்க, மொழிபெயர்ப்பாளர் ஒருவரை போலீசார் வரவழைத்து, பெண் பேசுவதை பதிவு செய்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறாராம்.. அவர் சற்று மனநிலை சரியில்லாதவர் என்று கண்டறியப்பட்டுள்ளது.. இதனால் மறுபடியும் விசாரணையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது..

இளம்பெண்
எனினும் அந்த பெண்ணிடம் விசாரணையை தொடர முடியாமல், காரணமும் தெரியாமல், பெண்ணுக்கு சிகிச்சையை தருவதா என்றும் புரியாமல் போலீசார் விழித்து கொண்டிருக்கிறார்களாம். இப்படித்தான் 5 மாதங்களுக்கு முன்பும் ஒரு வயதான பாட்டியை நடுரோட்டில், இளம்பெண் ஒருவர் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.. கடைசியில் அந்த பெண்ணும் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்ற தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications