ஆங்கிலேயர்களைப் போல பஞ்சாப்பை கொள்ளையடிக்க வந்த கெஜ்ரிவால்: முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி சாடல்
சண்டிகர்: ஆங்கிலேயர்களைப் போல பஞ்சாப்பை கொள்ளையடிக்க வந்துள்ளார் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் என்று பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி கடுமையாக சாடியுள்ளார்.
117 இடங்களைக் கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு பிப்ரவரி 14-ல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் பஞ்சாப் மாநில அரசியல் கட்சிகள் வேண்டுகோளை ஏற்று பிப்ரவரி 20-ந் தேதிக்கு வாக்குப் பதிவு ஒத்திவைக்கப்பட்டது.

பஞ்சாப் மாநிலத்தைப் பொறுத்தவரையில் தொங்கு சட்டசபைதான் அமையும் என்பது பொதுவான கருத்து கணிப்பு. ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும்; ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றும் என்பதும் கருத்து கணிப்புகளின் முடிவுகள்.
இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தின் போது ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவாலை முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக சரண்ஜித் சிங் சன்னி கூறியதாவது: ஆங்கிலேயர்கள் இந்தியாவை கொள்ளையடிக்க வந்தனர். அதே பாணியில் டெல்லியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலும் அவரது குடும்பத்தினரும் பஞ்சாப்பை கொள்ளையடிக்க வந்துள்ளனர்.
ஆனால் முகலாயர்களுக்கும் பிரிட்டிஷ் படையினருக்கும் பஞ்சாப் எப்படியான எதிர்ப்பை காண்பித்ததோ அதேபோல கெஜ்ரிவால் குடும்பத்துக்கும் கடும் எதிர்ப்பை பஞ்சாப் மக்கள் வெளிப்படுத்துவார்கள். பஞ்சாப் தேர்தலில் கெஜ்ரிவால் குடும்பத்தினர் தீவிர பிரசாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications