பஞ்சாப் சட்டசபை தேர்தல்: காங். முதல்வர் வேட்பாளர் பிப்ரவரி 6-ல் அறிவிப்பு
சண்டிகர்: பஞ்சாப் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது நாளை மறுநாள் பிப்ரவரி 6-ந் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
பஞ்சாப் சட்டசபை தேர்தல் பிப்ரவரி 20-ந் தேதி நடைபெற உள்ளது. பஞ்சாப் மாநிலத்தைப் பொறுத்தவரையில் தொங்கு சட்டசபைதான் உருவாகும்; எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்கின்ற கருத்து கணிப்புகள்.
தற்போது ஆளும் காங்கிரஸ் கட்சியைவிட ஆம் ஆத்மி கட்சிக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்; காங்கிரஸுக்கு 2-வது இடம்தான் என்றும் அக்கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் பஞ்சாப் மாநில காங்கிரஸில் யார் முதல்வர் வேட்பாளர் என்கிற குழப்பம் தொடருகிறது. தற்போதைய முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி, மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் நவ்ஜோத்சிங் சித்து ஆகிய இருவருமே தாங்களே முதல்வர் வேட்பாளர் என மல்லுக்கட்டுகின்றனர். நவ்ஜோத்சிங் சித்து, டெல்லி மேலிடம் முதல்வர் வேட்பாளரை தீர்மானிக்க கூடாது; மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்கிறார்.
இதனிடையே சண்டிகரில் இன்று பஞ்சாப் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரும் மூத்த தலைவருமான ஹரீஷ் சவுத்ரி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நாளை மறுநாள் லூதியானாவில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என அறிவிக்கப்படும். மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த அறிவிப்பை வெளியிடுவார் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications