இரவு 9 மணிக்கு மீண்டும் வேலைக்கு அழைத்ததால் டென்ஷன்.. ஊழியர் கொடுத்த ரிப்ளேவால் மனம்மாறிய ‛பாஸ்'
சண்டிகர்: ஹரியானா மாநிலம் குருகிராமை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் நிறுவனர் இரவு 9 மணிக்கு போன்கால் மீட்டிங்கிற்கு ஊழியரை அழைத்தார். அதற்கு அந்த ஊழியர் மறுப்பு தெரிவித்தார். வீட்டில் வேலை இருப்பதாகவும், மீட்டிங்கிற்கு வர முடியாது என்றும் அவர் வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பினார். அதனை பார்த்த அந்த பாஸ் மனம் திருந்தியதோடு, ஊழியரின் நிலையை அறியாமல் எப்படி இப்படியொரு பாஸாக மாறினேன் என்று கவலையுடன் பகிர்ந்த பதிவுக்கு பாராட்டுகள் குவிந்தது.
ஐடி, விளம்பரம், மார்க்கெட்டிங், மீடியா உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் வேலை நேரத்துக்கும் பிறகும் கூட பணியாற்ற வேண்டிய சூழல் உள்ளது. திடீரென்று நடக்கும் மாற்றம், அவசர கால பணி உள்ளிட்டவை தான் இதற்கு காரணம். இதனால் காலை முதல் மாலை வரை பணி செய்து முடித்து வீடு திரும்பினாலும் கூட தங்களின் மேனேஜர்கள் போன் செய்து பணி செய்ய வைப்பார்கள்.

இப்படியான சம்பவங்களை நம்மில் பலரும் அனுபவித்து இருக்கலாம். ஆனால் தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தை சேர்ந்த நிறுவனர் ஒருவர் தனது ஊழியருக்கு போன் செய்து இரவு 9 மணி போன்கால் மீட்டிங்கிற்கு அழைத்ததும், அதற்கு அந்த ஊழியர் அளித்த பதிலும் தற்போது கவனம் பெற்றுள்ளது.
அதாவது, ஹரியானா மாநிலம் குருகிராமை தலைமையிடாக கொண்டு லிட்டில் ஆட் மார்க்கெட்டர்ஸ் (Little Odd Marketers) என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் நிறுவனராக இருப்பவர் கிருத்திகா மார்வாஹா. இவர் சமீபத்தில் தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியருக்கு இரவு 9 மணிக்கு போன் செய்து போன்கால் மீட்டிங்கிற்கு அழைக்க முயன்றார். ஆனால் அந்த ஊழியர் அழைப்பை ஏற்கவில்லை.
மாறாக அந்த ஊழியர் கிருத்திகாவிற்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்தார். அதில், ‛டியர் கிருத்திகா. இரவு 9 மணிக்கான மீட்டிங்கிற்கு என்னால் வர முடியாது. நான வீட்டுக்கு செல்ல ஒரு மணிநேரம் வரை ஆகும். அதன்பிறகு இரவு உணவு தயார் செய்ய வேண்டும். என் மகனுக்கு கணித தேர்வு உள்ளது. இதனால் அவனுக்கு கணிதம் சொல்லி கொடுக்க வேண்டும்.
அதன்பிறகு கிச்சனை சுத்தம் செய்ய நேரம் எடுக்கும். கிச்சனை சுத்தம் செய்து கொண்டே என்னால் போன் பேச முடியும். ஆனால் நெட்வொர்க் பிரச்சனை இருப்பதால் அதற்கும் வாய்ப்பு இல்லை. இதனால் பணிநேரத்துக்கு பிறகு வேலை செய்வது கடினமான ஒன்று'' என்று மெசேஜ் அனுப்பினார்.
இதனால் அந்த நிறுவனத்தின் நிறுவனர் கிருத்திகா அதிருப்தியடைந்தார். இருப்பினும் யோசித்து பார்த்த அவர் அந்த வாட்ஸ்அப் மெசேஜை ஸ்கிரின்ஷாட் எடுத்து தனது லிங்க்ட்இன் பக்கத்தில் பதிவிட்டார். அந்த பதிவு தான் அவருக்கு பாராட்டை பெற்று தந்துள்ளது. அந்த பதிவில் கிருத்திகா, ‛‛ஒரு நிறுவனத்தை உருவாக்குவதற்காக இடைவிடாமல் நான் உழைத்து வருகிறேன். வார இறுதி நாட்கள், தூக்கம், குடும்ப நேரம் உள்ளிட்டவற்றை துறந்து தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வருகிறேன். இதனால் மற்றவர்களும் அதை போல் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். எனது டீமிடம் இருந்தும் அதேபோன்ற ஆர்வமான பணியை எதிர் பார்க்கிறேன்.
ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் வசதியாக நாம் ஒன்றை மறந்து விடுகிறோம். நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் சக ஊழியரை பணி நேரத்துக்கு பிறகு அழைத்தேன். அவர் டின்னர் சமைக்க வேண்டும். மகனின் தேர்வுக்கு உதவ வேண்டும். கிச்சனில் வேலை உள்ளது. நெட்வார்க் பிரச்சனை இருக்கிறது என்று கூறி மறுத்துள்ளார். நான் ஒரு எமர்ஜென்சியில் சிக்கி கொண்டதால் அவரது சூழலை கருத்தில் கொள்ளவில்லை. முதலில் கோபமடைந்ததேன். பிறகு யோசித்து பார்த்தேன்.
எப்படி பிற ஊழியர்களின் நிலைமையை கூட அறியாத இப்படியொரு பாஸாக மாறினேன் என்று நினைத்து பார்த்தேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை உள்ளது. குடும்பம் உள்ளது என்பதை நான் மறந்துவிட்டேன். இதனை கருத்தில் கொள்ளாமல் அழைத்து விட்டேன். இருப்பினும் ஒரு நிறுவனரின் கனவுக்கு தேவையான டீம் அமைவது அவசியம்.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நான் ஊழியர்களுக்காக எல்லாவற்றையும் கொடுக்க கையெழுத்திட்டேன் அது என் விருப்பம். ஒரு நிறுவன தலைவராக அது எனது பொறுப்பும் தான். ஆனால் நம் கனவுக்கு மற்றவர்கள் தங்களின் நேரத்தை கொடுப்பது ஒரு பாக்கியம். அது கிடைக்கும் என்று நம்புகிறேன்'' என்று கூறினார். இந்த போஸ்ட்டை பார்த்த பலரும் அவரை பாராட்டினர். உங்களை போல் மற்ற நிறுவனங்களின் நிறுவனங்களும் இருக்க வேண்டும் என்று கூறினர். இருப்பினும் தற்போது இந்த பதிவை கிருத்திகா டெலிட் செய்துவிட்டார். இருப்பினும் அதுதொடர்பான ஸ்கிரீன்ஷாட் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications