Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹர்பஜன்சிங் முதல் லால்ஜித் சிங் புல்லர் வரை.. கலக்கலான ஆம் ஆத்மி அமைச்சரவை

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: பஞ்சாப்பில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான அமைச்சரவையில் 10 பேர் இன்று பதவியேற்று கொண்டனர். இந்த அமைச்சரவை டாக்டர், பல் மருத்துவர், அரசு பணியை உதறி தள்ளியவர்கள், விவசாயி, ஊழலுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் என பன்முகத்தன்மை கொண்டதாக உள்ளது.

பஞ்சாப் சட்டசபை தேர்தலில் 117 தொகுதிகளில் 92ல் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. பகவந்த் மான் முதல்வராக பதவியேற்றார். இவரது அமைச்சரவையில் முதல்வர் உள்பட 18 பேர் அமைச்சராக செயல்படலாம்.

இந்நிலையில் இன்று 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். சண்டிகரில் நடந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் 10 பேருக்கும் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

டாக்டர், பல்மருத்துவர், அரசு பணியை விட்டு வந்தவர்கள், வழக்கறிஞர், விவசாயி, ஊழலுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றவர்கள் என பஞ்சாப் அமைச்சரவை அனைத்தும் கலந்த கலவையாக உள்ளது.

ஹர்பால் சீமா

ஹர்பால் சீமா

திர்பா தொகுதி எம்.எல்.ஏ.,வான ஹர்பால் சிங் 2வது முறையாக சட்டசபைக்குள் நுழைகிறார். தொழில் ரீதியாக வழக்கறிஞரான இவர் முதல்வர் பகவந்த் மானுக்கு மிகவும் நெருக்கமானவர். கடந்த முறை பஞ்சாப் சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டார்.

டாக்டர் பல்ஜித் கவுர்

டாக்டர் பல்ஜித் கவுர்

மால்வுட் தொகுதியில் இருந்து முதல் முறையாக டாக்டர் பல்ஜித் கவுர் எம்எல்ஏவாக தேர்வாகி உள்ளார். டாக்டரான இவர் முன்னாள் ஆம் ஆத்மி எம்பியான சாது சிங்கின் மகள் ஆவார். பல்ஜித் கவுர் தனது அரசு பணியை விட்டுவிட்டு அரசியலில் கவனம் செலுத்தி அமைச்சராகி உள்ளார்.

டாக்டர் விஜய் சிங்லா

டாக்டர் விஜய் சிங்லா

விஜய் சிங்லா பல்மருத்துவர் ஆவார். மான்சா தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்எல்ஏவாகி உள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக கட்சியில் தீவிர பணியாற்றினார். இவர் பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவை தோற்கடித்து அமைச்சராகி உள்ளார். இதில் சித்து மூஸ்வாலா இதற்கு முன்பு விஜய் சிங்லாவிடம் மருத்துவம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹர்பஜன் சிங்

ஹர்பஜன் சிங்

மஜா பிராந்தியத்தில் உள்ள ஜண்டியாலா தொகுதி எம்எம்ஏல்வாக ஹர்பஜன் சிங் உள்ளார். இவர் பஞ்சாப் அரசில் கலால் மற்றும் வரித்துறை அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். இவர் 2017 சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில் தற்போது வெற்றி பெற்றுள்ளார்.

ஹர்ஜோத் சிங் பெய்ன்ஸ்

ஹர்ஜோத் சிங் பெய்ன்ஸ்

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியை நிறுவியவர்களில் ஒருவர் தான் ஹர்ஜோத் சிங் பெய்ன்ஸ். ஆனந்த்பூர் சாஹிப் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளார். இவர் லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸில் தனது கல்வியை முடித்தவர். அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் ஈடுபட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

குர்மீத் சிங் மீட் கையர்

குர்மீத் சிங் மீட் கையர்

மெக்கானிக்கல் இன்ஜினியரான குர்மீத் சிங் மீட் கையர், ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தில் முதன் முதலாக தீவிரமாக பங்கேற்ற நபர்களில் ஒருவராவார். 2017ல், காங்கிரஸ் தலைவர் கேவல் தில்லானை தோற்கடித்து 27 வயதில் எம்எல்ஏவாக பஞ்சாப் சட்டசபைக்கு நுழைந்ததன் மூலம் இளம் வயது எம்எல்ஏ என்ற பெயரை பெற்றார். தற்போது ஆம் ஆத்மி கட்சியின் இளைஞர் அணித் தலைவராகவும் உள்ளார்.

 லால் சந்த் கட்டருச்சி

லால் சந்த் கட்டருச்சி

கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தில் ஈடுபாடு கொண்டவர் லால் சந்த் கட்டருக். இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நீண்டகாலம் பயணித்தார். பின்னர் மங்கத் ராம் பாஸ்லா என்பவர் கம்யூனிஸ்ட்கட்சியில் இருந்து விலகி பஞ்சாப்பில் கட்சி உருவாக்கியபோது இவரும் அங்கிருந்து வெளியேறினார். 2017 தேர்தலில், புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் (RMPI) வேட்பாளராக போவாவில் லால் சந்த் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன்பின் ஆம்ஆத்மியில் இணைந்து கனிமவள கொள்ளைக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

லால்ஜித் சிங் புல்லர்

லால்ஜித் சிங் புல்லர்

லால்ஜித் சிங் புல்லர் ஒரு விவசாயி ஆவார். மேலும் கமிஷன் கடை நடத்தி வருகிறார். முன்னாள் அமைச்சர் ஆதேஷ் பிரதாப் சிங் கைரோனை பட்டி தொகுதியில் தோற்கடித்து எம்எல்ஏவாக உள்ளார். சிரோமணி அகாலிதளம் (எஸ்ஏடி) கட்சியில் இருந்து வெளியேறி ஆம்ஆத்மியில் இணைந்த நிலையில் அமைச்சர் பதவியை பெற்றுள்ளார்.

பிரஹாம் சங்கர் ஜிம்பா

பிரஹாம் சங்கர் ஜிம்பா

முன்னாள் தொழில்துறை அமைச்சர் சுந்தர் ஷாம் அரோராவை ஹோஷியார்பூர் தொகுதியில் தோற்கடித்து எம்எல்ஏவாக பிரஹாம் சங்கர் ஜிம்பா மாறினார். 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள இவர் பஞ்சாப் தொழில் மேம்பாட்டு வாரியத்தின் துணைத் தலைவராக இருந்தார். காங்கிரஸில் தனது அரசியல் வாழ்க்கையை துவங்கிய நிலையில் ஹோஷியார்பூர் நகராட்சியில் கவுன்சிலராகவும் இருந்தார். உள்ளாட்சி தேர்தலில் அவருக்கு காங்கிரஸ் சீட்டு மறுக்கப்பட்டு, சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின் ஆம்ஆத்மியில் இணைந்து எம்எல்ஏவாகி உள்ளார்.

குல்தீப் சிங் தலிவால்

குல்தீப் சிங் தலிவால்

அஜ்னாலா தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக குல்தீப் சிங் தலிவால் தேர்வானவர். விவசாயியான இவர் 10ம் வகுப்பு முடித்துள்ளார். இவர் 2014ல் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு அமெரிக்காவில் இருந்தார். அதன்பிறகு விவசாயம் செய்து வருகிறார். 2019 பாராளுமன்ற தேர்தலில் காதூர் சாஹிப்பில் ஆம் ஆத்மி வேட்பாளராகப் போட்டியிட்டார். பின்னர் ஆம் ஆத்மி கட்சியின் மாவட்டத் தலைவரானார். தற்போது அஜ்னாலா சட்டசபை தொகுதியில் முதல் முறையாக வென்றுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+