ஹோட்டலை சூழ்ந்த விவசாயிகள்... பதறியடித்து பின்பக்கமாக ஓடிய பாஜக தலைவர்கள்!

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் பாக்வாரே பகுதியில் ஒரு ஹோட்டலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளையொட்டி பாஜக சார்பில் நிகழ்ச்சி நடந்தது. அப்போது அந்த ஹோட்டலை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பாஜக நிர்வாகிகள் ஹோட்டலின் பின்புறம் வழியாக நழுவி சென்றனர்.

பாஜக தலைவர்கள் விவசாயிகளுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவதாகவும், பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகவும் போராட்டம் நடத்திய விவசாயிகள் குற்றம்சாட்டினர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Farmers protest front of Hotel bjp Leaders Escape Via Backdoor

இந்தநிலையில் பஞ்சாப் மாநிலம் பாக்வாரே பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளையொட்டி பாஜக சார்பில் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது அந்த ஹோட்டல் முன்பு பாரதி கிசான் யூனியனை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த ஹோட்டல் பாஜக நிர்வாகி ஒருவருக்கு சொந்தமானது எனவும், அந்த நிர்வாகி கால்நடைகள் மற்றும் கோழி தீவனங்களை விற்கும் நிறுவனத்தையும் நடத்தி வருவதாகவும் அவரது நிறுவனத்தின் தயாரிப்புகளை புறக்கணிக்க போவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

ஹோட்டலை முற்றுகையிட்ட விவசாயிகள் பாஜக மாவட்ட மகளிர் அணி தலைவி உள்பட அக்கட்சியினர் பலரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

பின்னர் அவர்கள் சென்றவர்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஹோட்டலுக்கு சென்றனர். தொடந்து விவசாயிகள் ஹோட்டலுக்கு உள்ளே செல்ல முயன்றதால், பாஜக நிர்வாகிகள் அவசரம், அவரசமாக ஹோட்டலின் பின்புறம் வழியாக நழுவி சென்று விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
பாஜக தலைவர்கள் விவசாயிகளுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவதாகவும், பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகவும் போராட்டம் நடத்திய விவசாயிகள் கூறினர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஹோட்டலுக்கு வெளியே கம்பத்தில் விவசாய சங்க கொடியை ஏற்றினர், அந்த கொடி அகற்றப்பட்டாலோ அல்லது இனிமேல் அங்கு பாஜக நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கினாலோ அந்த ஹோட்டல் முன்பு போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+