"துர்நாற்றம்.." அடுத்து சில நொடிகளில் மயங்கி சரிந்த மக்கள்.. பஞ்சாப் கேஸ் லீக்.. அதிகாலையில் பகீர்
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் கேஸ் லீக் சம்பவத்தில் எதிர்பாராத விதமாக 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனிடையே விபத்து நடந்த அன்று என்ன நடந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் இன்று காலை மிக மோசமான சம்பவம் நடந்துள்ளது.. பஞ்சாபில் கியாஸ்புரா என்ற பகுதியில் இன்று அதிகாலையில் கேஸ் லீக் ஏற்பட்டு மோசமான விபத்து ஏற்பட்டுள்ளது.

கியாஸ்புரா பகுதியில் சிறிதும் பெரிதுமாக பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள சிறிய தொழிற்சாலையில் தான் இந்த விஷவாயு லீக் விபத்து நடந்துள்ளது.
கேஸ் லீக்: அங்கே செயல்பட்டு வரும் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து தான் இந்த கேஸ் லீக் விபத்து நடந்துள்ளது. இதனால் அங்கிருந்தவர்கள் உடனடியாக சுயநினைவை இழந்தனர். அவர்கள் அனைவருக்கும் உடனடியாக மீட்கப்பட்ட அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும், 11 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த கேஸ் லீக் சம்பவத்தால் 10 மற்றும் 13 வயதான சிறுவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அவர்களும் மாஸ்க் அணிந்தே மீட்புப் பணிகளைச் செய்து வருகின்றனர்.

இந்த கேஸ் லீக் சம்பவத்தால் சுமார் 300 மீட்டர் தொலைவு வரை கேஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அங்கு உள்ள அனைவரும் உடனடியாக வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. கேஸ் லீக் என்பதால் மேலும் பரவ வாய்ப்பு உள்ளதால், நிலைமை எப்படி இருக்கிறது என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான உதவிகள் செய்யப்படும் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.
துர்நாற்றம் மயக்கம்: இதனிடையே இந்த கேஸ் லீக் குறித்து சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது கேஸ் லீக் பகுதியில் இருந்த மக்களுக்கு இன்று அதிகாலை எழுந்திருக்கும் போதே துர்நாற்றம் வீசியுள்ளது. கொஞ்ச நேரம் அதைச் சுவாசித்த உடன் அவர்களுக்குத் தலைவலியும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து உமேஷ் குமார் கூறுகையில், "காலையில் எழுந்ததும் தலைவலியும் துர்நாற்றமும் ஏற்பட்டது. அப்போதே கேஸ் லீக் ஆகியுள்ளது புரிந்து கொண்டோம். இதனால் இருக்கும் அனைத்து கதவுகளையும் ஜன்னல்களையும் பூட்டினர். ஒரு கட்டத்திற்கு மேல் தலைவலி தாங்க முடியவில்லை.. இதனால் உறவினர்கள் வீட்டிற்குச் செல்ல முடிவு எடுத்து.. அங்கே சென்றோம்" என்று அவர் தெரிவித்தார்.

உயிரிழப்புகள்: மேலும், முதலில் உயிரிழந்தவர்கள் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்று சொல்லப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் அவர்கள் மூச்சுத் திணறலால் உயிரிழக்கவில்லை என்பது தெரிய வந்தது. லீக்கான கேஸ் நரம்புகளைத் தாக்கும் நச்சுத்தன்மை கொண்டதாம்.. அந்த நியூரோ டாக்ஸிக் வாயுக்கள் அவர்களின் நரம்பு மண்டலத்தைத் தாக்கியதில் தான் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
இந்த நியூரோ டாக்ஸிக் வாயுக்கள் மூளை மற்றும் நரம்புகளைப் பாதிப்பதால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதையடுத்து அங்கு உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணிகள் நடந்து வருகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications