ஹரியானா தேர்தலில் அதிர வைக்கும் காங்கிரஸ்..அடம் பிடிக்கும் ஆம் ஆத்மி! அடுத்த லிஸ்ட் ரெடி ஆயிருச்சே
சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில், காங்கிரஸுக்கு போட்டியாக இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. ஏற்கனவே அக்கட்சி சார்பில் இரு கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது ஆம் ஆத்மி தலைமை.
ஹரியானா மாநில சட்டசபை பதவிக்காலம் நிறைவடைய இருக்கும் நிலையில் அம்மாநிலத்தில் சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது.

அக்டோபர் மாதம் 5ஆம் தேதி அங்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் எட்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.
இந்த நிலையில் ஹரியானா பாஜக தனித்துப் போட்டியிடும் நிலையில், காங்கிரஸ் ஆம் ஆத்மி இடையே கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால் உடன்பாடு எட்டப்படாததால் காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மி கட்சியும் இந்த தேர்தலில் தனித்தனியே களம் காண்கின்றன.
இதேபோல ஜனநாயக ஜனதா கட்சி, ஆசாத் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. தற்போதைய சூழலில் ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி காங்கிரஸின் 31 வேட்பாளர்களைக் கொண்ட பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒலிம்பிக்கில் எடை பிரச்சனை காரணமாக வெளியேற்றப்பட்ட வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இதை அடுத்து காங்கிரஸ் சார்பில் அவர் ஜுலானா தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸுக்கு போட்டியாக இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. ஏற்கனவே அக்கட்சி சார்பில் இரு கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது ஆம் ஆத்மி தலைமை.
ஏற்கனவே 20 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த திங்களன்று ஆம் ஆத்மி வெளியிட்டது. இதனிடையே ஆம் ஆத்மி தனது இரண்டாவது வேட்பாளர் பட்டியலில் ஹென்ரி, சதௌரா, தானேசர், ரதியா, அதம்பூர், பர்வாலா, டைகான், பரிதாபாத் மற்றும் பவால் ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது.
தற்போது 3வது கட்ட வேட்பாளர் பட்டியலை செவ்வாய்கிழமையன்று வெளியிட்டுள்ளது ஆம் ஆத்மி. ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 11 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலில் சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த பீம் சிங் ரதியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அதன்படி, ராடௌர் தொகுதியில் பீம் சிங் ரதி, நிலோகேரியில், அமர் சிங், இஸ்ரானாவில் அமித் குமார், ராயில் தொகுதியில் ராஜேஷ் சரோஹா மற்றும் கர்கௌடா தொகுதியில் மஞ்சீத் ஃபர்மானா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதேபோல், கர்ஹி சாம்ப்லா-கிலோ தொகுதியில் பிரவின் குஸ்கானி, கலனூரில் நரேஷ் பக்ரி, ஜஜ்ஜார் தொகுதிய்ல் மகேந்திர தஹியா, அடேலி தொகுதியில் சுனீல் ராவ், ரேவாரி தொகுதியில் சதீஷ் யாதவ் மற்றும் ஹதின் தொகுதியில் கர்னல் ராஜேந்திர ராவத் ஆகியோர் போட்டியிடுவார்கள் என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications