Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹரியானாவில் பம்மிய காங்கிரஸ்..பாய்ந்த பாஜக! ராகுலுக்கு “கை” காட்டும் மோடி! ஆமா..ஆம் ஆத்மி என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சண்டிகர் : ஹரியானா சட்டசபை தேர்தலில், காங்கிரஸுக்கு போட்டியாக இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியும் வேட்பாளர்களை அறிவித்து களத்தில் இறங்கியது. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு இருக்கும் நிலையில், ஆம் ஆத்மியின் நிலை, அதள பாதாளத்திற்கு சென்றுள்ளது அக்கட்சி நிர்வாகிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

ஹரியானா மாநில சட்டசபை பதவிக் காலம் நிறைவடைந்த நிலையில் அம்மாநிலத்தில் சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் கடந்த அக்டோபர் மாதம் அறிவித்த நிலையில், தேர்தலும் அமைதியாக முடிவடைந்துள்ளது.

haryana assembly election 2024 congress 2024

அக்டோபர் மாதம் 5ஆம் தேதி அங்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் எட்டாம் தேதியான இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்த நிலையில் ஹரியானாவில் பாஜக தனித்துப் போட்டியிட்ட நிலையில், காங்கிரஸ் ஆம் ஆத்மி இடையே கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால் உடன்பாடு எட்டப்படாததால் காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மி கட்சியும் இந்த தேர்தலில் தனித்தனியே களம் கண்டன. இதேபோல ஜனநாயக ஜனதா கட்சி, ஆசாத் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவிய நிலையில், ஒரு வழியாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று நிறைவடைந்திருக்கிறது. இந்த நிலையில் 46 தொகுதிகளில் வெல்லும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும். தற்போது அங்கு 90 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில் ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. தொடர்ந்து ஹரியானாவில் 10 ஆண்டுகள் பாஜக ஆட்சியில் இருக்கும் நிலையில் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை அங்கு எதிரொலித்ததாக கூறப்பட்டது.

இதன் காரணமாக மேட்ரிக்ஸ், பியுப்பில் பல்ஸ் உள்ளிட்ட பல்வேறு கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் தனி பெரும்பான்மையுடன் ஹரியானாவில் ஆட்சியைப் பிடிக்கும் என கூறின. ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் மீது இருந்த அதிருப்தி, 2024 மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, காங்கிரஸ் கூட்டணி அரசு கொடுத்த வாக்குறுதிகள், வேலை இன்மை பிரச்சனை, அக்னிவீர் திட்டம், வினேஷ் போகத் பாலியல் சர்ச்சை விவகாரம் போன்றவை ஆளும் பாஜக அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது.

குறிப்பாக காங்கிரஸ் 50 முதல் 64 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடிக்கும் என நியூஸ் 24 எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்தன. பாஜகவில் 20 முதல் 30 இடங்கள் வரை மட்டுமே வெல்ல முடியும் எனவும், பிற கட்சிகள் அதாவது தனித்து களம் கண்டுள்ள ஆம் ஆத்மி, ஜனநாயக ஜனதா கட்சி -ஆசாத் சமாஜ் கட்சி கூட்டணி வெறும் ஐந்து இடங்களில் மட்டுமே வெல்ல முடியும் என கருத்துக் கணிப்புகள் கூறின. ஆனால் தேர்தல் முடிவுகளோ அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. தற்போது பாஜக 'ஹாட்ரிக்' வெற்றியை பெறுவது உறுதியாகியுள்ளது.

டெல்லி பஞ்சாபில் ஆளும் கட்சியாக இருக்கும் ஆம் ஆத்மி இந்தியா கூட்டணியிலும் பங்கு வைக்கிறது. அதே நேரத்தில் சில மாநில தேர்தல்களில் கூட்டணி தொடர்பாக காங்கிரசுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையே சிக்கல் ஏற்பட்டது. அந்த வகையில் தான் தற்போதும் ஹரியானா தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து களம் கண்டது. ஆனால் அந்தக் கட்சியால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன.

பாஜகவோ அல்லது காங்கிரஸோ ஆட்சியைப் பிடித்திருந்தாலும் இந்த தேர்தலில் ஆம் ஆத்மி பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இழுபறி என வந்திருந்தால் கூட அக்கட்சியில் ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லை. அந்த வகையில் பஞ்சாபில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி ஹரியானாவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதையே சரியான தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. ஆனால் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றிருந்தால் ஓரளவு கவுரவமான எம்.எல்.ஏ.க்களை பெற்றிருக்க முடியும் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.

அதே நேரத்தில் பாஜக - காங்கிரஸ் இடையே இழுபறி நீடிக்கும் பகுதிகளில் ஓட்டுக்களை பிரித்து, வெற்றியை நிர்ணயிக்கும் கட்சியாக ஆம் ஆத்மி இருக்கும் எனவும், சில இடங்களில் அதன் தாக்கத்தை உணர முடியும் என்ற கணிப்பும் பொய்யாகியிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+