ஹரியானா எக்ஸிட் போல் சொல்வது என்ன! பாஜகவை துடைத்தெறியும் மக்கள்.. காங்கிரஸ் ஆட்சி உறுதி?
சண்டிகர்: ஹரியானாவில் மொத்தம் 90 இடங்கள் உள்ள நிலையில், அங்கு ஒரே கட்டமாக நேற்று புதன்கிழமை வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு முடிந்த உடனே எக்ஸிட் போல் முடிவுகளும் வெளியானது. இப்போது வரை வெளியாகியுள்ள கிட்டதட்ட அனைத்து எக்ஸிட் போல்களிலும் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் நேற்று ஒரு கட்டமாக வாக்குப்பதிவு முடிந்த நிலையில், பல்வேறு செய்தி நிறுவனங்களும் எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட்டன.

இதில் கிட்டதட்ட எக்ஸிட் போல் முடிவுகளும் சொல்வது ஒன்று தான். அங்கு பாஜக ஆட்சியை இழப்பது உறுதி. காங்கிரஸ் கட்சியை அங்கு வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியானா எக்ஸிட் போல்: அதன்படி Peoples Pulse என்ற அமைப்பு நடத்திய எக்ஸிட் போலில் காங்கிரஸ் 55 இடங்களைக் கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல ஹரியானாவில் பாஜக 26 இடங்களைக் கைப்பற்றும் என்றும் ஐஎன்எல்டி கூட்டணி 2-3 இடங்களில் மட்டுமே வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் ஜேஜேபி 0-1 இடத்திலும் சுயேச்சைகள் 3-5 இடங்களிலும் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.
அதேபோல Dhruv Research என்ற அமைப்பு நடத்திய ஹரியானா எக்ஸிட் போல் முடிவுகள் காங்கிரஸ் 50 முதல் 64 இடங்களில் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் பாஜக 22 முதல் 32 இடங்களில் மட்டுமே வெல்லும் என கூறப்பட்டுள்ளது.
ஆட்சியைப் பிடிக்கும் காங்கிரஸ்: டைனிக் பாஸ்கர் அமைப்பின் எக்ஸிட் போல் முடிவுகளிலும் கிட்டதட்ட இதே தான் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் 44 முதல் 54 இடங்களில் வெல்லும் என்றும் பாஜக 15- 29 இடங்களில் வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல லோக்தள் 1- 5 இடங்களில் வெல்லும் என்றும் ஜேஜேபி 0 முதல் 1 இடத்தில் வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல Republic Bharat - Matrize இணைந்து நடத்திய எக்ஸிட் போலில் காங்கிரஸ் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் 55 முதல் 62 இடங்களிலும், பாஜக 18 முதல் 24 இடங்களிலும் ஜேஜேபி 0 முதல் 3 இடங்களிலும் லோக்தள் கூட்டணி 0 முதல் 6 இடங்களிலும் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.
பாஜக படுதோல்வி: ஹரியானா PMarq எக்ஸிட் போல் முடிவுகளில் காங்கிரஸ் 51 முதல் 61 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாஜக 27 முதல் 35 இடங்களிலும், ஜேஜேபி 0 முதல் 1 இடத்திலும் லோக் தள் கூட்டணி 1 முதல் 5 இடங்களிலும் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளுக்கு 4 முதல் 9 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவோர்ட்டஸ் அமைப்பு நடந்திய சர்வேயில் பாஜக 50-58 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியாகத் தேர்தலை எதிர்கொண்ட பாஜக 20-28 இடங்களில் மட்டுமே வெல்லுமாம். ஜேஜேபி 0-2 இடங்களிலும் இதர கட்சிகள் 10- 14 இடங்களிலும் வெல்லும் என்று அந்த எக்ஸிட் போல் சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
ஆட்சியைப் பிடிப்பது யார்: அதேபோல பாஸ்கர் ரிப்போர்ட்ர் என்ற அமைப்பு நடத்திய சர்வேயில் காங்கிரஸ் 44- 54 இடங்களில் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 19 -29 இடங்களிலும் ஐஎன்எல்டி 1-5 இடங்களிலும் ஜேஜேபி 0-1 இடத்திலும் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் 4-10 இடங்களில் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Jist TIF அமைப்பு நடத்திய எக்ஸிட் போல் சர்வேயில் 45 -53 இடங்களில் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 29- 37 சீட்களில் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. ஜேஜேபி ஒரு இடத்திலும் வெல்ல வாய்ப்பே இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஎன்எல்டி அமைப்பு நடத்திய சர்வேயில் 4- 6 இடங்களில் வெல்லும் என்று எக்ஸிட் போல் சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications