பாஜகவிற்கு படுதோல்வி.. ஹரியானாவில் ஆட்சியை இழக்கிறது.. மகுடம் சூடும் காங்கிரஸ்.. எக்சிட் போல்
சண்டிகர்: ஹரியானா எக்ஸிட் போல் வெளியாகி வரும் நிலையில், பாஜக படு தோல்வி அடையும், காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என்று Peoples Pulse அமைப்பு கணிப்பு வெளியிட்டு உள்ளது.
ஹரியானாவில் இருக்கும் 90 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. வருகிற 8ம் தேதி அங்கே வாக்குகள் எண்ணப்பட உள்ளன. கடந்த 2019 தேர்தலுக்குப் பிறகு, பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஜனநாயக் ஜனதா கட்சியின் கூட்டணி அமைத்து மாநில அரசாங்கத்தை அமைத்தது, அப்போது மனோகர் லால் கட்டார் முதலமைச்சரானார். இதில் மெஜரிட்டி பெற 46 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக 40 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும், ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களிலும், இந்திய தேசிய லோக் தள் மற்றும் ஹரியானா லோக்கித்ட் கட்சி தலா ஒரு இடங்களில் வென்றிருந்தது. அதேபோல, சுயேட்சை வேட்பாளர்கள் 7 தொகுதிகளில் வென்றிருக்கின்றனர்.

பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மையாக மெஜாரிட்டி கிடைக்காத நிலையில், ஜனநாயக ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து பாஜக ஆட்சியை பிடித்தது. இதற்காக கூட்டணி கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலாவுக்கு துணை முதலமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது ஜனநாயக ஜனதா கட்சி தனது ஆதரவை விலக்கிக்கொண்டிருக்கிறது. எனவே முதலமைச்சர் கட்டார் உட்பட அனைத்து அமைச்சர்களும் கூண்டோடு ராஜினாமா செய்தார்.
இதையடுத்து நயாப் சிங் சைனி பாஜக சார்பாக சுயேட்சைகள் உதவியுடன் முதல்வரானார். ஆனால் கடந்த மே மாதம் 3 சுயேச்சை இவருக்கான ஆதரவை வாபஸ் வாங்கிய நிலையில், அங்கே பாஜக மைனாரிட்டி ஆட்சி நடத்தி வந்தது.
தேர்தல் முடிவுகள்: ஹரியானாவில் இருக்கும் 90 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. வருகிற 8ம் தேதி அங்கே வாக்குகள் எண்ணப்பட உள்ளன. அங்கே கட்சிகள் போட்டியிட்ட இடங்கள்
பாஜக - 89 இடங்களில் போட்டி
இந்தியா கூட்டணி - காங்கிரஸ் 89 இடங்களில் போட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 இடத்தில் போட்டி
ஜேஜேபி - ஏஎஸ்பி(கேஆர்) கூட்டணி: ஜனநாயக ஜனதா கட்சி 66 இடங்களில் போட்டி, ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷி ராம்) 12 இடங்களில் போட்டி
ஆம் ஆத்மி - 88 இடங்களில் போட்டி
ஹரியானா தேர்தலில் 101 பெண்கள் மற்றும் 464 சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 1,031 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
கிட்டத்தட்ட 68 சதவிகித வாக்குகள் வரை இந்த தேர்தலில் பதிவாகி உள்ளன.
கணிப்பு: ஹரியானா எக்ஸிட் போல் வெளியாகி வரும் நிலையில், பாஜக படு தோல்வி அடையும், காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என்று Peoples Pulse அமைப்பு கணிப்பு வெளியிட்டு உள்ளது. ஹரியானாவில் காங்கிரஸ் 55 இடங்களைக் கைப்பற்றும் என்று Peoples Pulse எக்ஸிட் போல் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஹரியானாவில் பாஜக 26 இடங்களைக் கைப்பற்றும் - Peoples Pulse எக்ஸிட் போல் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications