அய்யா.. நான் தேர்தலில் போட்டியிடவே இல்லை.. ஆளை விடுங்க.. ஹரியானா பாஜக வேட்பாளர் திடீர் பல்டி!

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கவல்ஜீத் சிங் அஜ்ரானா திடீரென தாம் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளார். பாஜக மேலிடம் தமக்கு போட்டியிட கொடுத்த 'சீட்டை' சரண்டர் செய்யப் போவதாகவும் கவல்ஜீத் அஜ்ரானா தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துவிட்டு 2 மாதங்களுக்கு முன்னர் பாஜகவில் இணைந்த கவல்ஜீத் அஜ்ரானா வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு எதிராக பாஜக நிர்வாகிகள் போராட்டம் நடத்தியதால் இந்த முடிவை அவர் அறிவித்துள்ளார்.

ஹரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 5-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. ஹரியானாவின் 90 தொகுதிகளிலும் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

haryana assembly election 2024 haryana election 2024

ஹரியானாவில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கு எதிராக கடும் அதிருப்தி அலை வீசுகிறது. இதனால் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறது.

ஹரியானா தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் சாரை சாரையாக காங்கிரஸில் இணைந்து வருகின்றனர். இதனை சமாளிக்க பாஜக மேலிடம் திணறி வருகிறது.

இந்த நிலையில் பெஹோவா சட்டசபை தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கவல்ஜீத் அஜ்ரானா தாம் தேர்தலில் போட்டியிடப் போவது இல்லை என திடீரென அறிவித்துள்ளார். பாஜக மேலிடம் தமக்கு வழங்கிய சீட்டை சரண்டர் செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளார்.

பாஜகவையும் பிரதமர் மோடியையும் மிக கடுமையாக விமர்சித்தவர் கவல்ஜீத் அஜ்ரானா. ஹரியானா சீக்கிய குருத்வரா நிர்வாக கமிட்டியின் தலைவரான கவல்ஜீத் கடந்த ஜூலை மாதம்தான் பாஜகவில் இணைந்தார். இதற்கு பாஜக நிர்வாகிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த நிலையில் கவல்ஜீத் அஜ்ரானா வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் கொந்தளித்த பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்தே தேர்தலில் தாம் போட்டியிடவில்லை என கவல்ஜீத் அஜ்ரானா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக கவல்ஜீத் அஜ்ரானா கூறுகையில், பாஜகவில் பல ஆண்டுகளாக உழைத்துக் கொண்டிருக்கும் மூத்த தலைவர்கள் என்னை வேட்பாளராக அறிவித்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாஜகவின் மூத்த தலைவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறேன். ஆகையால்தான் பாஜகவின் நலன் கருதி நான் தேர்தலில் போட்டியிடவில்லை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+