ஹரியானா தேர்தல்: மீண்டும் பாஜக அணியிலா துஷ்யந்த் சவுதாலா? பகுஜன் சமாஜ், பீம் ஆர்மியுடன் கூட்டணி?

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சி இணையுமா? பகுஜன் சமாஜ் கட்சி அல்லது பீம் ஆர்மியுடன் கூட்டணி அமைக்குமா? என்பதை முன்வைத்து விவாதங்கள் களை கட்டி உள்ளன. ஆனால் பாஜக கூட்டணிக்கு திரும்புவதற்கு வாய்ப்பு இல்லை என்பதுதான் துஷ்யந்த் சவுதாலாவின் திட்டவட்டமான நிலைப்பாடு.

ஹரியானா மாநில சட்டசபைக்கு அக்டோபர் 1-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அன்று பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Haryana Assembly Election 2024 Dushyant Chautala

அக்டோபர் முதல் அக்டோபர் 4 வரை தொடர்ச்சியான விடுமுறைகள் இடம் பெறுவதால் வாக்குப் பதிவு குறையக் கூடும்; ஆகையால் மாநில சட்டசபை தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்பது பாஜகவின் கோரிக்கை. இதேபோல இந்திய தேசிய லோக் தளமும் வலியுறுத்தியுள்ளது. ஆனால் காங்கிரஸ், ஜனநாயக் ஜனதா கட்சி ஆகியவை இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த பரபரப்புகளுக்கு நடுவே கடந்த தேர்தலில் 10 இடங்களில் வென்று பாஜக ஆட்சி அமைக்க காரணமாக இருந்த துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சி இம்முறை எந்த கட்சியுன் கூட்டணி அமைக்கும் என்பது விவாதமாகி இருக்கிறது. பாஜக கூட்டணி ஆட்சியில் நான்கரை ஆண்டுகள் நீடித்த அந்த கட்சி கடந்த மார்ச் மாதம்தான் ஆதரவை வாபஸ் பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறியது. இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தனர். இதனால் துஷ்யந்த் சவுதாலா கட்சி காங்கிரஸுடன் கூட்டணி அமைக்குமா? என்கிற கேள்வி எழுந்தது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த துஷ்யந்த் சவுதாலா, லோக்சபா தேர்தலில் பாஜக எங்களுக்கு கவுரவமான இடத்தை ஒதுக்க முன்வரவில்லை. அதனால் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறும். அந்த கூட்டணிக்கு மீண்டும் திரும்பும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்கிறார். அதேநேரத்தில் காங்கிரஸுடனான கூட்டணியையும் துஷ்யந்த் தவிர்க்கிறார். சில நாட்களுக்கு முன்னர் பகுஜன் சமாஜ் கட்சியுடன் துஷ்யந்த் கட்சி கூட்டணி அமைக்கிறது என கூறப்பட்டது. தற்போது பீம் ஆர்மி கட்சியுடன் கூட்டணிக்கான சாத்தியம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த தேர்தலை போல இந்த தேர்தலிலும் துஷ்யந்த் கிங் மேக்கராவாரா? இல்லையா? என்பது அக்டோபர் 4-ல் தெரிந்துவிடுமே!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+