சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹரியானா சட்டசபை தேர்தல்: பாஜக 83; காங்-க்கு 3 இடங்கள்: ஏபிபி-சி வோட்டர் கருத்து கணிப்பு

Google Oneindia Tamil News

சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக 83 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்க வைக்கும் என்கிறது ஏபிபி சி வோட்டர் கருத்து கணிப்பு.

ஹரியானாவின் 90 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 21-ல் நடைபெறுகிறது. இத்தேர்தல் களத்தில் பாஜக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

Haryana Assembly elections: BJP to win 83 seats- ABP Survey

எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தள் ஆகியவை சிதறி நிற்கின்றன. இதனால் மீண்டும் பாஜகதான் ஆட்சியை அமைக்கும் என கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஹரியானா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து ஏபிபி டிவி சேனல்- சி வோட்டர் இணைந்து கருத்து கணிப்பை நடத்தின. இதில் பாஜகதான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியானாவில் மொத்தம் உள்ள 90 இடங்களில் பாஜக 83 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றியை பெறுமாம். காங்கிரஸுக்கு வெறும் 3 இடங்கள்தான் கிடைக்குமாம். எஞ்சிய கட்சிகளுக்கு 4 தொகுதிகள் கிடைக்கலாம் என்கிறது இக்கருத்து கணிப்பு

English summary
According to the ABP- C voters Survey BJP Will get 83 seats in Haryana.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X