ஹரியானா பாஜக எம்எல்ஏ சுபாஷ் சுதாவுக்கு கொரோனா உறுதி

Subscribe to Oneindia Tamil

சண்டீகர்: ஹரியானா பாஜக எம்எல்ஏ சுபாஷ் சுதாவுக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அவர் மேதாந்தா மெடிசிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மட்டும் ஒரே நாளில் ஹரியானாவில் 407 பேருக்கு கொரோனா உறுதியானது.

ஹரியானாவில் கொரோனாவால் இதுவரை 14,024 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நேற்று ஒரே நாளில் 407 பேருக்கு கொரோனா உறுதியானது. நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது.

Haryana BJP MLA Subhash Sudha tested coronavirus positive

இதனால் மருத்துவர்கள், செவிலியர்கள், அரசியல்வாதிகள், போலீஸ்காரர்கள் என பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் ஹரியானா மாநிலத்தில் பாஜக எம்எல்ஏ சுபாஷ் சுதாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இவர் குருஷேத்ரா மாவட்டத்தில் தானேசர் எம்எல்ஏ ஆவார். இவருக்கு இரு தினங்களாக அதிகமான காய்ச்சல் இருந்தது. இதையடுத்து இவர் குர்காவ்னில் உள்ள மேதாந்தா மெடிசிட்டி மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கு அவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அவர் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதையடுத்து அவரது குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவருடன் கடந்த சில தினங்களாக தொடர்பில் இருந்தவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. குருஷேத்ரா மாவட்டத்தில் 115 பேருக்கு கொரோனா பாதிப்புள்ளது. இந்த மாவட்டத்தில் யாரும் கொரோனாவுக்கு பலியாகவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+