சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குறைவாக பதிவான வாக்கு சதவீதம்.. ஹரியானாவில் கட்சிகளிடையே நெருக்கமான போட்டி

Google Oneindia Tamil News

Recommended Video

    Haryana assembly elections 2019 | BJP leading | ஹரியானா சட்டசபை தேர்தல்.. பாஜக அதிரடி முன்னிலை

    சண்டிகர்: குறைந்த வாக்குப்பதிவு தான் ஹரியானாவில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி தரும் வகையிலான போட்டிக்கு காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    ஹரியானாவில் உள்ள மொத்தம் உள்ள 90 தொகுதிகளுக்கு கடந்த 21ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் பாஜக கூட்டணி ஒரு அணியாகவும், காங்கிரஸ் கூட்டணி ஒரு அணியாகவும், துஷ்யத் சௌதலாவின் ஜனநாயக ஜனதா கட்சி தனியாகவும் போட்டியிட்டன.

     ஹரியானா இழுபறி.. அனைத்து அலுவல்களையும் ரத்து செய்த அமித் ஷா.. பாஜக ஆபீஸ் விரைகிறார்.. அடுத்து என்ன? ஹரியானா இழுபறி.. அனைத்து அலுவல்களையும் ரத்து செய்த அமித் ஷா.. பாஜக ஆபீஸ் விரைகிறார்.. அடுத்து என்ன?

    ஹரியானாவில் சிக்கல்

    ஹரியானாவில் சிக்கல்

    இதில் பாஜக கூட்டணி காலை 11.30 மணி நிலவரப்படி 36 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 32 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. இதில் முக்கிய திருப்பமாக துஷ்யத் சௌதலாவின் ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்த கட்சியின் ஆதரவு இல்லாமல் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆட்சியமைக்க முடியாத நிலை நிலவுகிறது.

    இருகட்சிகளுக்கும்

    இருகட்சிகளுக்கும்

    இதர கட்சிகள் 9 இடங்களில் வென்றள்ள போதிலும் ஆட்சியமைக்க ஆதரவு திரட்டுவது என்பது காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு பெரும் சவாலை தரும். குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு கடும் சவாலாக இருக்கும்.

    2014 ல் அதிகபட்சம்

    2014 ல் அதிகபட்சம்

    இந்நிலையில் ஹரியானாவில் கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் அறுதிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியை பிடித்த நிலையில் அந்த தேர்தலில் மிக அதிகபட்சமாக 76. 13 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    வாக்கு பதிவு சரிவு

    வாக்கு பதிவு சரிவு

    ஆனால் 2019ம் ஆண்டு அதாவது இந்த முறை ஹரியானாவில் சட்டமன்ற தேர்தலில் 68.41 சதவீதம் வாக்குகள் தான் பதிவானது. இதுதான் பாஜக, காங்கிரஸ் இடையே நெருங்கிய போட்டிக்கு காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. பொதுவாக வாக்கு சதவீதம் குறைந்தால் ஆளும் கட்சிக்கு பாதகமாக அமைய அதிக வாய்ப்பு உள்ளது. அதன்படியே பாஜகவுக்கு வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது பாதகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கிங் மேக்கர் இவர்

    கிங் மேக்கர் இவர்

    ஹரியானாவில் கடந்த முறை மொத்தம் உள்ள 90 இடங்களில் 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருந்த காங்கிரஸ் இந்த முறை 32 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கர்நாடகா பாணியில் முதல்வர் பதவியை துஷ்யத் சௌதலாவின் ஜனநாயக ஜனதா கட்சிக்கு காங்கிரஸ் விட்டுக்கொடுத்து ஆட்சி அமைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. எனினும் பாஜக 40 இடங்களை தாண்டி வென்றால் நிலைமை அப்படி ஏற்பட வாய்ப்பு இல்லை.

    English summary
    Haryana Election Results 2019 LIVE: Is low turnout the cause of a close contest in Haryana?, this assembly elections decreased drastically and polling was limited to only 68.47%
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X