Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெறும் 32 வாக்குகள்!. கைமாறிய வெற்றி! பாஜக செம ஹேப்பி-ஹரியானாவில் இந்த 5 தொகுதிகளின் ரிசல்டை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.. இதில் பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்து 3வது முறையாக ஆட்சியை அமைத்துள்ளது. இந்தி ஹார்ட்லேண்டில் முக்கிய மாநிலமான ஹரியானாவில் நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிட்ட 5 தொகுதியின் முடிவுகள் குறித்து நாம் பார்க்கலாம்.

1 கர்ஹி சாம்ப்லா-கிலோய்: ஹரியானாவில் இந்த முறை மிகவும் முக்கியமான தொகுதியாக இது மாறியிருக்கிறது. காங்கிரஸ் தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா இங்கு தான் போட்டியிட்டார்.அவர் பாஜகவின் மஞ்சு ஹூடாவை எதிர்த்துக் களமிறங்கினார்.. இந்தத் தேர்தலில் ஹூடா சுமார் 1.08 லட்சம் வாக்குகளைப் பெற்றார். இதன் மூலம் அவர் சுமார் 71 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆம் ஆத்மி சார்பில் பிரவின் குஸ்கானியால் 1000 கூடப் பெற முடியவில்லை. ஹூடா ஏற்கனவே 2009, 2014 மற்றும் 2019 என 3 தேர்தல்களில் தொடர்ந்து இந்த தொகுதியில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

haryana assembly election results 2024 2024 haryana assembly election 2024 haryana election 2024 2024

2 லத்வா: ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி இங்கிருந்து போட்டியிட்டார். குருக்ஷேத்ரா மாவட்டத்தில் உள்ள இந்த லட்வா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மேவா சிங்கை எதிர்த்து சைனி போட்டியிட்டார். கடந்த 3 தேர்தல்களில் இந்த தொகுதியில் 3 வெவ்வேறு கட்சிகள் வென்று இருந்தன. 2009இல் ஐஎன்எல்டி, 2014இல் பாஜக, 2019இல் காங்கிரஸ் இங்கு வென்று இருந்தது.

கடும் போட்டி இருந்த போதிலும் நயாப் சிங் சுமார் 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதேநேரம் இந்த தொகுதியில் சுயேச்சை வேட்பாளர்கள் எல்லாம் சேர்ந்து சுமார் 16 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்றது குறிப்பிடத்தக்கது.

3 ஜூலானா: ஹரியானாவில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான தொகுதி ஜூலானா. ஜிந்த் மாவட்டத்தில் உள்ள இந்த தொகுதியில் தான் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போட்டியிட்டார். வினேஷின் உறவினர்கள் அதிகம் இருக்கும் தொகுதி இது. முன்னாள் தடகள வீரரும் ஹரியானா பாஜக இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் மாநில துணைத் தலைவருமான கேப்டன் யோகேஷ் குமார் இதில் பாஜக சார்பில் போட்டியிட்டார்.

கடந்த 3 தேர்தல்களிலும் இங்குப் பிராந்திய கட்சிகளே வென்ற நிலையில், இந்த முறை தேசிய கட்சிகளான காங்கிரஸ்- பாஜக இடையே கடும் போட்டி இருந்தது. வினேஷ் போகத் மற்றும் யோகேஷ் குமார் மாறி மாறி முன்னிலை பெற்றன. கடைசியாக சுமார் 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் வெற்றி பெற்றார்.

4 உச்சன காலன்: ஜேஜேபி தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான துஷ்யந்த் சவுதாலா ஜிந்த் மாவட்டத்தில் உள்ள இந்த உச்சனா கலான் தொகுதியில் போட்டியிட்டார். முன்னாள் துணைப் பிரதமர் தேவிலாலின் கொள்ளுப் பேரன் தான் இந்த துஷ்யந்த். ஹரியானாவில் பாஜக உடன் இவர் கூட்டணி வைத்திருந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு தான் கூட்டணியில் இருந்து வெளியேறினார்.

இந்த தொகுதியில் முன்னாள் துணை முதல்வரான சவுதாலா வெல்ல வாய்ப்புகள் குறைவு என்றே சொல்லப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய உடனே அவர் பின்னடைவைச் சந்தித்தார். இந்த தொகுதியில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவியது. இருப்பினும், இறுதியில் பாஜக வேட்பாளர் தேவேந்திர சதர் புஜ் வெறும் 32 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

5 குருகிராம்: தேசிய தலைநகரான டெல்லிக்கு மிக அருகே உள்ள பொருளாதார மையம் குருகிராம். கடந்த 2019 தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த இளம் தலைவர் மோஹித் குரோவர், இந்த முறை காங்கிரஸ் வேட்பாளராகக் களமிறங்கினார். பாஜக சார்பில் முகேஷ் சர்மா போட்டியிட்டார். கடந்த 2 தேர்தல்களிலும் பாஜகவே வென்றிருந்த நிலையில், இந்த முறையும் மிக எளிதாக பாஜக வென்றது. சுமார் 68 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக இங்கு வென்றது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+