கிராமப்புறங்கள் கைவிட்டாலும், பாஜகவை அள்ளி தூக்கிய நகர்ப்புற வாக்குகள்.. ஹரியானாவில் ஏறிய மோடி மவுசு
சண்டிகர்: ஹரியானாவில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும்நிலையில், கிராமப்புற பகுதிகளில் காங்கிரஸும், நகர்ப்புறங்களில் பாஜகவும் முன்னிலையை பெற்று வருகின்றன.. இதில், பாஜகவின் வாக்குகள் திடீரென கணிசமாக உயர்ந்துள்ளது பெரும் கவனத்தை பெற்று வருகிறது.
பாஜகவின் 10 வருட ஆட்சியின் மீது ஹரியானா மக்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு நிறைய ஏமாற்றங்கள் உள்ளதாக தெரிகிறது... கடந்த 2 சட்டமன்ற தேர்தல்களிலும் பாஜகவுக்கு வெகுவாக வாக்குகளை அளித்திருந்தபோதிலும், இந்த முறை கிராமப்புற மக்கள் சோர்ந்து போயிருப்பதாக கூறப்படுகிறது.

சிறுபான்மையினர்: காரணம், வறுமைக்கோட்டில் இருப்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும், சிறுபான்மையினர்களுக்கும் மோடி அரசால் முன்னெடுக்கப்பட்ட வஞ்சிப்பு நடவடிக்கைகளை, சிறிதும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. முக்கியமாக, விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள் இதுவரை எதுவுமே நிறைவேறவில்லை.. அத்துடன், விவசாயிகளின் போராட்டத்தை போலீசாரின் வன்முறை மூலம் அடக்கி ஒடுக்கியதையும் விவசாயிகளால் மறக்கவும் முடியவில்லை.
இத்தனைக்கும், ஒவ்வொரு தேர்தலிலும் ஜாட் மக்களின் வாக்குகளே பிரதான பங்கினை வகித்து வரும்நிலையில், விவசாயிகள் போராட்டத்தில் பெருமளவு ஜாட் விவசாயிகளே ஈடுபடும் நிலைமையும் வந்துவிட்டது.. அப்படி ஈடுபட்டும்கூட அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டது அதற்கு மேல் கொதிப்பை ஜாட் மக்களுக்கு தந்துவிட்டது.. போதாக்குறைக்கு நடிகை கங்கனாவின் சர்ச்சை கருத்துக்கள், ஜாட் மக்களுக்கு பாஜக மீதான கோபத்தை அதிகரித்து விட்டதாம்.
ஏமாற்றம்: ஜாட் மக்கள் பெரும்பாலும், காங்கிரஸ் நிலைப்பாட்டில் இருந்து வரும்நிலையில், பாஜகவின் கடந்த 10 வருட ஆட்சி ஏமாற்றத்தால், மொத்தமாக காங்கிரஸ் பக்கம் தங்கள் வாக்குகளை செலுத்துவார்கள் என்று அரசியல் விமர்சகர்களும் கருத்துக்களை கூறியிருந்தனர்.. அதன்படியே, இன்றைய வாக்கு எண்ணிக்கைகளில் கிராமப்புறங்களில் காங்கிரஸ் கட்சியே தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
அதேபோல, பாஜக மீதுள்ள அதிருப்தியால், இஸ்லாமியர்களின் தங்களது வாக்குகளை காங்கிரசுக்கே செலுத்தியிருப்பதாக தெரிகிறது. ஏனென்றால், ஹரியானா மாநிலத்தின் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியான நூக் நகரத்தில், கிட்டத்தட்ட 1,000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களின் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கியிருந்தது பாஜக அரசு.. ஏற்கனவே காங்கிரஸூக்கு இஸ்லாமியர்களின் ஆதரவு இருந்து வரும்நிலையில், பாஜகவின் இந்த அராஜக போக்கால், சிறுபான்மையினர் ஓட்டுக்களும் காங்கிரஸுக்கே திரும்பக்கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் கணித்திருந்தார்கள்
ஹரியானா: அதுமட்டுமல்ல, கடந்த லோக்சபா தேர்தலிலும், கடந்த சட்டமன்றத் தேர்தல்களில், ஹரியானாவில், குறிப்பாக கிராமப்புறங்களில், வாக்கு சதவீதத்தில் பாஜக சரிவையே கண்டிருந்தது... எனவே, இந்த முறையாவது, கிராமப்புற வாக்குகளை அள்ள வேண்டும் என்று பாஜக பல்வேறு வியூகங்களை முன்னெடுத்திருந்தது.
கிராமப்புற வாக்காளர்களின் நம்பிக்கையை மீட்பதற்காகவும், கட்டாரின் ஆட்சியில் அதிருப்திக்குள்ளான எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அடிமட்டத் தொழிலாளர்கள் மற்றும் கட்சித்தலைவர்களை செயல்படுத்தவும் ஆர்எஸ்எஸ் உதவியை பாஜக நாடியிருந்தது. எனினும், அத்தகைய வியூகங்கள், பாஜகவுக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை என்றார்கள். ஆனால், கடந்த மக்களவைத் தேர்தலில் 45 கிராமப்புற சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்ததை இங்கு குறிப்பிட வேண்டியிருக்கிறது..
நகர்ப்புறங்கள்: கிராமப்புறங்களில் வாக்குகளை நழுவவிட்டாலும், நகர்ப்புறங்களில் பாஜகவுக்கான ஆதரவும், வாக்குகளும் கணிசமாக கிடைத்து கொண்டிருப்பதாக, தற்போதைய வாக்கு எண்ணிக்கைகளில் தெரியவந்துள்ளது.
இதுவரை வெளியான வாக்கு எண்ணிக்கையில், பாஜக 52 இடங்களிலும், காங்கிரஸ் 33 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது... ஹரியானாவில் இதுவரை எந்த அரசியல் கட்சியும் தொடர்ந்து 3 முறை வெற்றி பெறாத நிலையில், பாஜக சாதனையை எட்டியிருக்கிறது. அதிலும், ஜாட் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் 36 இடங்களில் 19 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்பட்டு வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications