அக்னிவீரர்கள் திட்டத்தை முன்வைத்து ஹரியானாவில் பாஜகவை கதறவிடும் ராகுல் காந்தி! அமித்ஷா வாக்குறுதி!

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் மத்திய பாஜக அரசின் அக்னிவீரர்கள் திட்டம், விவசாயிகளின் கோரிக்கையான வேளாண் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டம் உள்ளிட்டவற்றை முன்வைத்து ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இதனால் அக்னிவீரர்களுக்கு 5 ஆண்டுகால பணிக்கு பின்னரும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது என மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

ஹரியானாவில் அக்டோபர் 5-ந் தேதி 90 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 8-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

haryana assembly election 2024 amit shah 2024

ஹரியானாவில் தேர்தல் பிரசாரம் முடிவடைய சில நாட்களே உள்ள இறுதி கட்ட பிரசாரம் அனல் பறக்கிறது. காங்கிரஸைப் பொறுத்தவரையில் விவசாயிகளின் கோரிக்கையான வேளாண் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் சட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டுவரவில்லை; விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்குகிறது; விவசாயிகள் போராட்டத்தில் உயிர் நீத்த 700 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலை என பேசியும் வாக்குறுதி அளித்தும் பாஜகவை மிரள வைத்துக் கொண்டிருக்கிறது.

அத்துடன் அக்னிவீரர்கள் திட்டத்தையும் காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து வருகிறது. லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாட்டின் ராணுவ வீரர்களை ஒப்பந்த தொழிலாளர்களாக மாற்றுவதுதான் அக்னிவீரர்கள் திட்டம். நாட்டின் ராணுவத்தின் கண்ணியத்தை சீர்குலைக்கும் இத்திட்டத்தை கடுமையாக எதிர்ப்போம் என்றார்.

ஹரியானா தேர்தல் களத்தில் ஏற்கனவே ஆளும் பாஜக அரசு மீது கடும் அதிருப்தி அலை இருக்கிறது. அதேநேரத்தில் காங்கிரஸின் இடைவிடாத இந்த பிரசாரங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நெருக்கடியிலும் பாஜக சிக்கி இருக்கிறது.

ஹரியானாவில் இன்று தேர்தல் பிரசாரம் செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராகுல் காந்தி ஒரு பொய் சொல்லும் இயந்திரம் போல செயல்படுகிறார். அக்னிவீரர்களுக்கு ஓய்வூதியமே இல்லை என பொய் பிரசாரம் செய்கிறார். நமது இளைஞர்களை ராணுவத்தில் சேர்க்கவே அக்னிவீரர்கள் திட்டம் கொன்டு வரப்பட்டது. ஆகையால் நமது ராணுவத்தில் சேர உங்கள் வீட்டுப் பிள்ளைகளை அனுப்புவதற்கு எந்தவித தயக்கமும் வேண்டும். ஒவ்வொரு அக்னிவீரருக்கும் ஓய்வூதியம் உண்டு. 5 ஆண்டுகளுக்குப் பின்னர் பணியே இல்லாமல் அக்னிவீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+