கடும் கோபத்தில் இருந்த ஹரியானா மக்கள்.. ஆனால் அதையும் தாண்டி பாஜக வென்றது எப்படி! சூட்சுமமே இதுதான்
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை அமைக்கும் என்றே எக்ஸிட் போல்கள் சொன்ன போதிலும் இப்போது பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. பாஜக மீது மக்கள் கோபத்தில் இருந்த போதிலும் அங்கு எப்படி வெல்ல முடிந்தது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ஹரியானா தேர்தல் முடிவுகள் வழக்கம் போலப் பலருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் உள்ளது. அங்குக் காங்கிரஸ் வெல்லும் என எக்ஸிட் போல்கள் சொல்லப்பட்ட போதிலும், பாஜக பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

மொத்தம் இருந்தது 3 பிரச்சினைகள்: இதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம். ஹரியானா மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கு 3 விஷயங்கள் தான் முக்கிய பிரச்சினையாக இருந்தது.
முதலில் விவசாய சட்டங்கள். கடந்த 2020ம் ஆண்டு மத்திய அரசு 3 விவசாய சட்டங்களைக் கொண்டு வந்தன. இதைப் பெரியளவில் எதிர்த்தது என்னவோ பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் தான். டெல்லியில் போராட்டத்தைத் தொடங்கிய விவசாயிகள் சுமார் ஓராண்டுக்கு மேலாகப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். அதன் பிறகே விவசாய சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டன.
இந்த போராட்டத்தை மத்திய அரசு கையாண்ட விதம் விவசாயிகளுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக விவசாயிகள் போராட்டத்தின் போது பாஜக தலைவர்கள் பல சர்ச்சை கருத்துகளைக் கூறியிருந்தனர். போராடும் விவசாயிகள் தீவிரவாதிகள் என்று கூட சிலர் குறிப்பிட்டனர். இதெல்லாம் அவர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. சமீபத்தில் பாஜக எம்பி கங்கனா ரனாவத் கூட போராடிய விவசாயிகளை வங்கதேச வன்முறையாளர்களுடன் ஒப்பிட்டது மீண்டும் சர்ச்சையாக வெடித்தது.
அக்னிவீர் திட்டம்: அடுத்து 2வது விஷயம், அக்னிவீர் திட்டம். இந்தியாவுக்கு அதிகளவில் ராணுவ வீரர்களை அனுப்பும் மாநிலங்களில் முக்கியமானது ஹரியானா.. மத்திய அரசு கடந்த 2022ம் ஆண்டு இந்த அக்னிவீர் திட்டத்தைக் கொண்டு வந்தது.. இந்த அக்னிவீர் திட்டத்தின் கீழ், இளைஞர்கள் நான்கு ஆண்டுகள் மட்டுமே பாதுகாப்புப் படைகளில் பணிபுரிவார்கள். அதன் பிறகு, 25% அக்னி வீரர்கள் மட்டுமே அதில் தொடர முடியும். மீதமுள்ளவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.
இதற்கு ஹரியானா உட்பட வட இந்தியாவில் பல மாநிலங்களில் மிகக் கடுமையான எதிர்ப்பு நிலவியது. பல பகுதிகளில் தீவிரமான போராட்டங்களும் நடத்தப்பட்டன. வட இந்தியாவில் பாஜகவுக்கு எதிராக இந்தளவுக்கு போராட்டங்கள் நடந்ததே இல்லை எனச் சொல்லும் அளவுக்குப் போராட்டம் பெரிதாக வெடித்திருந்தது. இது 2வது காரணம்.
போராட்டம்: 3வது மல்யுத்த வீரர்கள் போராட்டம். ஹரியானாவில் மல்யுத்தத்திற்கும் அதிகம் முக்கியத்துவம் தரப்படும். இந்தியா சார்பில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களில் பெரும்பாலானோர் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான். பிரிஜ் பூஷன் சிங் விவகாரம் எழுந்த போது மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் நடத்தப்பட்ட விதமும் ஹரியானா மக்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது.
கோபம் மத்திய பாஜக மீதுதான்: இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த 3 விஷயங்களுமே மத்திய பாஜக அரசு தொடர்புடையது. மாநில பாஜக அரசுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. இதன் காரணமாகவே டெல்லி பாஜக மீது மக்கள் கோபத்தில் இருந்தாலும் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் ஹரியானாவில் பாஜகவால் முன்னிலை பெற முடிந்துள்ளது.
வேலையின்மை உள்ளிட்ட சில காரணங்களுக்காக மாநில பாஜக அரசு மீதும் மக்களுக்குச் சற்று கோபம் இருந்துள்ளது. அதை உணர்ந்தே பாஜக இந்தாண்டு தொடக்கத்தில் மனோகர் லால் கட்டாரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு சைனியை முதல்வராக நியமித்தது. இதன் மூலம் பாஜகவால் ஆட்சிக்கு எதிரான மனநிலையைச் சமாளிக்க முடிந்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications