ADGP புரன் குமார் தற்கொலை.. திடீரென துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார்.. ஐபிஎஸ் அதிகாரி துயர முடிவு
சண்டிகர்: ஹரியானாவில் கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வந்த ஒய் புரன் குமார் என்ற மூத்த ஐபிஎஸ் அதிகாரி தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
ஹரியானாவில் கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வந்தவர் ஒய் புரன் குமார். இவர் சண்டிகர் செக்டார் 11 பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் தான் அவர் தனது துப்பாக்கியை எடுத்து தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி அறிந்தவுடன் போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இதுதொடர்பாக சண்டிகர் சீனியர் எஸ்பிப கன்வார்தீப் கவுர் கூறுகையில், ‛‛இன்று ஐபிஎஸ் அதிகாரி புரன் குமார் தற்கொலை செய்து கொண்டதாக மதியம் 1.30 மணியளவில் செக்டார் 11 போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.
மத்திய தடயவியல் நிபுணர்களும் வந்தனர். விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணைக்கு பிறகு பிற தகவல்கள் தெரியவரும்'' என்று கூறியுள்ளார். அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை.
அவரது மனைவியான மூத்த ஐபிஎஸ் அதிகாரி அம்நீத் பி குமார் ஜப்பானில் உள்ளார். ஹரியானா முதல்வர் நயிப் சிங் சைனி தலைமையில் அதிகாரிகள் குழு ஜப்பான் சென்ற நிலையில் அவருடன் அம்நீத் பி குமார் சென்றுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications