ஹரியானா தேர்தல்: சொன்னதை கேக்கலனா இதுதான் நடக்கும்.. முக்கிய தலைகளுக்கு பாடம் புகட்டிய பாஜக
சண்டிகர்: ஹரியானாவில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முன்னாள் அமைச்சர்கள் உட்பட 8 பாஜக நிர்வாகிகளை கட்சித் தலைமை அதிரடியாக நீக்கியிருக்கிறது.
இந்த ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் ஹரியானா மிக முக்கியமானதாக இருக்கிறது. காரணம், ஏற்கெனவே இந்த மாநிலத்தில் கடந்த 2 முறை பாஜக ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. எனவே மூன்றாவது முறையும் ஆட்சியை கைப்பற்ற முயன்று வருகிறது. ஆனால் கட்சிக்குள் வெடித்த கலவரம், பாஜகவை கடுமையாக பாதித்திருக்கிறது.

அதாவது தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருப்பதால், பாஜக மீது அம்மாநில மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது. இது காங்கிரஸுக்கு சாதகமாக மாறிவிடக்கூடாது என்பதால், வேட்பாளர்கள் பட்டியலில் கட்சி பல மாற்றங்களை செய்தது. எனவே, ஏற்கெனவே முக்கிய தலைகளாக இருந்தவர்களுக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை. இதுதான் கட்சிக்குள் கலவரத்தை ஏற்படுத்த காரணமாக அமைந்துவிட்டது.
குறிப்பாக முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சிங் சவுதாலா ஆகியோருக்கு சீட் தராதது, அவர்களது அதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனல் சவுதாலா உள்ளிட்ட 8 முக்கிய பிரமுகர்கள் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனுவை வாபஸ் பெற வைக்க கட்சி எவ்வளவோ வலியுறுத்தியது. ஆனால், அதிருப்தி நிர்வாகிகள் இதை ஏற்கவில்லை. எனவே, தற்போது இவர்கள் அனைவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர்.
இவர்கள் 6 ஆண்டுகள் வரை கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாகவும், இவர்களுடன் கட்சிக்காரர்கள் யாரும் அன்னம் தண்ணீர் புழங்கக்கூடாது என்று கட்சித்தலைமை உத்தரவிட்டிருக்கிறது. இருப்பினும் அதிருப்தி நிர்வாகிகள் போட்டியிடுவதில் உறுதியாக இருக்கின்றனர்.
ஹரியானாவில் மொத்தம் 90 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இந்த தொகுதிகளை அனைத்திற்கும், அக்டோபர் 5ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் வெளியாகின்றன. பாஜக தனித்து போட்டியிடுகிறது. அதேபோல காங்கிரஸுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையே கூட்டணி ஏற்படாததால், இரண்டும் தனித்தனியே களம் காண்கின்றன. மறுபுறம் ஜனநாயக ஜனதா கட்சியும், ஆசாத் சமாஜ் கட்சியும் கூட்டணியாக இணைந்து களம் காண்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications