ரகசிய ஒப்பந்தம்.. பஞ்சாப்பில் அகாலிதளம், பாஜக மறைமுக கூட்டணி.. முதல்வர் சரண்ஜித் சிங் விமர்சனம்
சண்டிகர்: பஞ்சாப்பில் அகாலிதளம், பாஜக மறைமுக கூட்டணி வெளிவந்துள்ளது என முதல்வர் சரண்ஜித் சிங் விமர்சனம் செய்தார்.
பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி நடந்த நிலையில் சரண்ஜித் சன்னி முதல்வராக இருந்தார். 5 ஆண்டுகள் நிறைவடைந் நிலையில் மாநிலத்தில் உள்ள 117 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
மொத்தம் 1,304 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.15 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

வாக்கு பதிவு
அவர்களுக்காக 24,689 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 2,952 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணி முதல் 117 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு துவங்கியது. காலை முதல் பொதுமக்கள் வரிசையில் நின்று ஓட்டு போட்டு வருகின்றனர். இதில் பதிவாகும் ஓட்டுகள் மார்ச் 10ம் தேதி எண்ணப்பட உள்ளன. மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சி தனித்தனியே களம் காண்கிறது.

போட்டி யாருக்கெல்லாம்
பாஜக கூட்டணி அமைத்து களத்தில் குதித்துள்ளது. பாஜக கூட்டணியில் காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ், முன்னாள் மத்திய அமைச்சர் சுக்தேவ் சிங் தின்ட்சாவின் எஸ்ஏடி(எஸ்) கட்சியுடன் போட்டியிடுகிறது. இதுதவிர சிரோமணி அகாலிதளம் கட்சி பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து களம் இறங்கியுள்ளது. அதாவது பஞ்சாப்பில் பாஜகவும், சிரோமணி அகாலிதளம் கட்சியும் தொடர்ந்து கூட்டணியாக செயல்பட்டு வந்தது.

பாஜகவுக்கு ஆதரவு
ஆனால் மத்திய அரசின் விவசாய சட்டத்துக்கு சிரோமணி அகாலிதளம் எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியில் இருந்து வெளியேறியது. இந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கைகோர்த்து தேர்தலை சந்தித்தது. இந்நிலையில் தான் சிரோமணி அகாலிதளம் கட்சியின் தலைவர் பிக்காராம் சிங் நேற்று அளித்த பேட்டியில், ‛பஞ்சாப்பில் சிரோமணி அகாலிதளம், பகுஜன் சமாஜ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும். எங்களின் முதல் எதிரி காங்கிரஸ் தான். மாநிலத்தில் ஆட்சியமைக்க பாஜகவும் உதவி செய்ய தயாராக உள்ளோம்' எனக்கூறினார்.

முதல்வர் விமர்சனம்
இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங், பாஜக, சிரோமணி அகாலிதளம் கட்சியின் மறைமுக கூட்டணி வெளிவந்துள்ளது என விமர்சனம் செய்துள்ளது. இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‛‛சிரோமணி அகாலிதளம், பாஜக கூட்டணி வெளிவந்துள்ளது. இரண்டுபேரும் டேரா சாச்சா சவுதா அமைப்பிடம் ஆதரவு கோரியுள்ளனர். இதனால் பஞ்சாப் மக்கள் எங்களுடன் கூட்டணி அமைத்து ஓட்டுகள் மூலம் அவர்களுக்கு பாடம் கற்று கொடுக்க வேண்டும்.'' என குறிப்பிட்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications