விடிகாலையில் கேட்ட சத்தம்.. தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் வீரர் திடீர் தற்கொலை.. பரபரப்பு
துப்பாக்கி சுடும் வீரர் நமன்வீர் சிங் பிரார் தற்கொலை செய்து கொண்டார்
சண்டிகர்: தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் வீரர் நமன்வீர் சிங் பிரார், தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.
தேசிய துப்பாக்கி சுடும் வீரர் நமன்வீர் சிங் பிரார்.. 29 வயதாகிறது.. இவர் பயிற்சியாளரும்கூட.. மொஹாலியின் செக்டர் 71-ல் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை தன்னுடைய ரூமிலேயே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை
விடிகாலை நேரத்தில் துப்பாக்கி சுடும் சத்தத்தை கேட்டதுமே, வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அங்கு சென்று பார்த்தனர்.. ரத்தம் வழிந்த நிலையில் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ந்தனர்.. எனினும், அவரை மொஹாலியின் 6-வது கட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.. ஆனால், டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

போஸ்ட் மார்ட்டம்
இதையடுத்து, சடலம் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டது... இந்த கொலை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது உடனடியாக தெரியவில்லை.. அதற்குள் தகவலறிந்து போலீசார் விரைந்து வந்தனர்.. இந்த கொலை தொடர்பான விசாரணையும் துவங்கி உள்ளனர்.

விசாரணை
இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் அமன்தீப் சிங் சொல்லும்போது, "நமன்வீர் சிங் தன்னுடைய ரூமில் தனியாகத்தான் இருந்துள்ளார்.. அப்போது அதிகாலை 3:35 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது.. உரிமம் பெற்ற ஆஸ்திரியாவில் தயாரிக்கப்பட்ட க்ளோக் துப்பாக்கியால, தன்னைத்தானே சுட்டுக்கொண்டுள்ளார்.. இதற்கான காரணத்தை விசாரித்து வருகிறோம்" என்றார்.

தங்கம் வென்றவர்
தற்கொலை செய்து கொண்ட வீரர், டிஏவி கல்லூரி, செக்டர் 10, மற்றும் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஆவார்.. இந்திய பல்கலைக்கழக சாம்பியன்ஷிப் மற்றும் உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகளில் இரட்டை ட்ராப் துப்பாக்கி சுடுதல் நிகழ்வில் வெண்கலம் வென்றவரும்கூட.. அதேபோல, மாஸ்டர்ஸ் மீட் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் தங்கம் தட்டி சென்றவர்.. கடந்த சில வருடங்களாகவே, இளம் துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications