பஞ்சாப்பில் கொடூரம்.. லூதியானாவில் வாயு கசிவு ஏற்பட்டதில் 11 பேர் துடிக்க துடிக்க பலி.. என்ன நடந்தது?
சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் வாயு கசிவு ஏற்பட்டதில் 11 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கியாஸ்புரா பகுதியில் வாயு கசிவு ஏற்பட்டதில் 9 பேர் பலியாகி உள்ளனர். இதில் 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று காலை நடந்து உள்ளது.
சம்பவ இடத்திற்கு உடனடியாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்தனர். அங்கே தற்போது தேசிய பேரிடர் மீட்பு படையினர் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

வாயு கசிவு காரணமாக மரணம் ஏற்பட்டு உள்ளது. என்ன மாதிரியான வாயு என்று விவரம் வெளியிடப்படவில்லை.
சிறிய தொழிற்சாலை ஒன்றில் மூடிய அறையில் இந்த வாயு கசிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் உள்ளே இருந்தவர்கள் சுயநினைவை இழந்து, அதன்பின் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நிச்சயமாக, இது ஒரு வாயு கசிவு சம்பவம்தான். NDRF குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து மக்களை வெளியேற்றி மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்த சம்பவத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர். மற்றும் 11 பேர் உடல்நிலை சரியில்லாமல் உள்ளனர் என்று லூதியானா வெஸ்ட் எஸ்டிஎம் சுவாதி தெரிவித்து இருக்கிறார்..
இந்த சம்பவத்திற்கான காரணம் தெரியவில்லை.
இங்கே மாஸ்க் அணிந்து தேசிய மீட்பு படையினர் மீட்பு பணிகளையும், ஆய்வுகளையும் செய்து வருகின்றனர். அருகில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
அதேபோல் உள்ளூர் பகுதி மக்கள் அங்கே நுழைய கூடாது என்று தடுக்கப்பட்டு உள்ளனர்.
#WATCH | Punjab: An incident of gas leak reported in Giaspura area of Ludhiana.
— ANI (@ANI) April 30, 2023
Police say, "At least 5 casualties reported. 5-6 people fell unconscious and they have been admitted to a hospital. A rescue team has been called to the spot. A team of doctors & ambulances have… pic.twitter.com/e3NTMKBu3z
ஆந்திர பிரதேச சம்பவம்: இதேபோல் கடந்த 2020ல் ஆந்திர பிரதேசத்தில் நடந்த விஷவாயு விபத்து அப்போது நாட்டையே உலுக்கியது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருக்கும் எல்ஜி பாலிமர் ரசாயன தொழிற்சாலையில் கடந்த 2020 மே 8ம் தேதி அதிகாலை இந்த விபத்து ஏற்பட்டது.
ஆலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக அதிகாலை 3 மணிக்கு விஷவாயு கசிந்தது. இந்த விஷவாயு கசிவு காரணமாக 10க்கும் மேற்பட்டோர் பலியாகினர் .
மக்கள் சாலையிலேயே விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தனர். அதிகாலை வெளியே வந்த பலர் மயங்கி விழுந்தனர். ஸ்டைரீன் (styrene) என்ற வாயு கசிவு காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்டைரீன் (styrene) வாயுவை எத்தனைல் பென்சீன் என்றும் அழைக்கிறார்கள். இது பொதுவாக பிளாஸ்டிக் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் வாயு ஆகும். பிளாஸ்டிக் உருவாக்கத்தின் போது இதை அதிகமாக பயன்படுத்துவார்கள்.
பெரிய அளவில் இந்த வாயுவிற்கு கெட்ட மணமோ நல்ல மணமோ இருக்காது. ஆனால் இதை நேரடியாக சுவாசிப்பது மிகவும் கொடுமையானது. உயிருக்கே இந்த வாயு ஆபத்து விளைவிக்கும்.
#WATCH | Punjab: Nine dead, 11 hospitalised in an incident of gas leak in Giaspura area of Ludhiana. Visuals from the spot as local administration and medical team reach the spot.
— ANI (@ANI) April 30, 2023
Local officials say that the area has been cordoned off. pic.twitter.com/moDPTVG8XS
அந்த சம்பவத்திற்கு பின் தற்போது அதேபோல் ஒரு சம்பவம் பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் நடந்து உள்ளது. அங்கு வாயு கசிவு ஏற்பட்டதில் 9 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் என்ன மாதிரியான கேஸ் லீக்கானது என்று விவரம் வெளியாகவில்லை.
போபால்: இதற்கு முன் மத்திய பிரதேச மாநில போபாலில் 1984ம் ஆண்டு டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் அங்கு உள்ள யூனியன் கார்பைடு நிறுவனத்திலிருந்து வெளியேறிய மீத்தைல் ஐசோசயனேட் விஷ வாயு தாக்கி கிட்டத்தட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.












Click it and Unblock the Notifications