ஹரியானா விவசாயிகளே.. 10 ஆண்டுகால பாஜக ஆட்சியை தூக்கி எறியுங்கள்.. சண்டிகரில் ப.சிதம்பரம் வேண்டுகோள்!

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: ஹரியானாவில் 10 ஆண்டுகாலம் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் பாஜக அரசை விவசாயிகள் தூக்கி எறிய வேண்டும் என்று மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் ஹரியானா காங்கிரஸில் எந்த ஒரு பிளவும் இல்லை; அனைவரும் ஒருங்கிணைந்தே தேர்தலை சந்திக்கின்றனர் என்றும் ப.சிதம்பரம் விளக்கம் அளித்தார்.

ஹரியானாவின் 90 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அக்டோபர் 5-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அக்டோபர் 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

haryana assembly election 2024 haryana election 2024 2024 2024

ஹரியானா தேர்தல் தொடர்பாக சண்டிகரில் மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் கூறியதாவது: ஹரியானா மாநில காங்கிரஸ் கமிட்டியில் எந்த ஒரு பிளவும் இல்லை. மூத்த தலைவர்களான குமாரி செல்ஜாவும் சரி.. பூபிந்தரசிங் ஹூடாவும் சரி.. ஒருவரை ஒருவர் விமர்சிக்கவும் இல்லை.. ஒருவரை பற்றி ஒருவர் கருத்து தெரிவிக்கவும் இல்லை.

பொதுவாக வேட்பாளர்கள் தேர்வில், மூத்த தலைவர்கள் தங்களது கை ஓங்கி இருக்க வேண்டும் என நினைப்பது வழக்கம்தான். ஆனால் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டால், அனைவரும் ஒருங்கிணைந்து பிரசாரம் செய்வதும் நடைமுறையில் இருப்பதுதான். காங்கிரஸ் கட்சியில் எந்த ஒரு அதிருப்தியும் இல்லை. கட்சிகளில் தலைவர்களிடையே போட்டி இருப்பது சகஜமானதுதான்.

பாஜகவில்தான் முன்னாள் அமைச்சர் அனில் விஜ், முதல்வர் பதவியை தமக்கு தர வேண்டும் என்கிறார். லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த அடியின் விளைவுதான் இத்தகைய மோதல்கள். பாஜகவில் அதிருப்தி, பிளவு இருப்பதைத்தான் இது வெளிப்படுத்துகிறது. இதேபோல இன்னும் பல அதிருப்தி குரல்கள் வெடிக்கத்தான் போகிறது.

ஹரியானாவில் 10 ஆண்டுகள் ஆட்சியில் பாஜக இருந்துவிட்டது. பொதுவாக 10 ஆண்டுகால ஆட்சி என்பதுதான் போதுமானது என்பது என் கருத்து. ஹரியானாவில் 70% பேர் விவசாயத்தை நம்பியே உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் ஹரியானா பாஜக அரசு விவசாயிகளுக்கு எந்த கடனுதவியும் வழங்கவில்லை. மத்திய அரசின் திட்டங்களில் ஹரியானா விவசாயிகள் பதிவு செய்வது கணிசமாக குறைந்து வருகிறது. போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. ஆகையால் ஹரியானா விவசாயிகள் 10 ஆண்டுகால பாஜக ஆட்சியை தூக்கி எறிய வேண்டும். இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+