வெளியே போங்க.. ஊரை விட்டு பதறி ஓடிய மக்கள்.. சர்ரென பரவிய "கேஸ்".. பஞ்சாப்பில் கொடூர சம்பவம்
சண்டிகர்: பஞ்சாப்பில் வாயு கசிவு ஏற்பட்ட நிலையில் கியாஸ்புரா பகுதியில் வசிக்கும் மக்கள் அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வாயு கசிவு ஏற்பட்டதில் 9 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கியாஸ்புரா பகுதியில் வாயு கசிவு ஏற்பட்டதில் 9 பேர் பலியாகி உள்ளனர். இதில் 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் வெளியேற்றம்
பால் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையான கோயல் மில்க் பிளாண்டில்தான் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. அங்கே இருக்கும் குளிரூட்டும் அமைப்பில் வாயு கசிவு ஏற்பட்டது.
கசிவின் 300 மீட்டர் சுற்றளவில் உள்ள மக்கள் சுவாசிப்பதில் சிரமத்தை அனுபவித்ததாக கூறப்படுகிறது. அவர்கள் எல்லோரும் மூக்கை மூடிக்கொண்டு அங்கிருந்து ஓடி இருக்கிறார்கள்.
வெளியானது என்ன மாதிரியான கேஸ் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.
ஆனால் வெளியானது விஷ வாயு என்பது மட்டும் உறுதியாகி உள்ளது. அதீத குளிர் சாதனங்களை பாதுகாக்கும் வாயுக்கள் வெளியாகி காற்றில் கலந்து விஷமாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
போலீஸ்
அங்கே குவிந்த போலீசார் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் மக்களை உடனே ஊரை விட்டு வெளியேற்றினர். இதனால் பலி எண்ணிக்கை இப்போதைக்கு 9 என்ற அளவில் உள்ளது. அங்கே பொதுமக்கள் யாரும் மரணம் அடையவில்லை.
அந்த தொழிற்சாலை ஊழியர்கள் மட்டுமே மரணம் அடைந்து உள்ளனர்.

என்ன நடந்தது?
சம்பவ இடத்திற்கு உடனடியாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்தனர். அங்கே தற்போது தேசிய பேரிடர் மீட்பு படையினர் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
வாயு கசிவு காரணமாக மரணம் ஏற்பட்டு உள்ளது. என்ன மாதிரியான வாயு என்று விவரம் வெளியிடப்படவில்லை.
சிறிய தொழிற்சாலை ஒன்றில் மூடிய அறையில் இந்த வாயு கசிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் உள்ளே இருந்தவர்கள் சுயநினைவை இழந்து, அதன்பின் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நிச்சயமாக, இது ஒரு வாயு கசிவு சம்பவம்தான். NDRF குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து மக்களை வெளியேற்றி மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த சம்பவத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர். மற்றும் 11 பேர் உடல்நிலை சரியில்லாமல் உள்ளனர் என்று லூதியானா வெஸ்ட் எஸ்டிஎம் சுவாதி தெரிவித்து இருக்கிறார்..
இங்கே மாஸ்க் அணிந்து தேசிய மீட்பு படையினர் மீட்பு பணிகளையும், ஆய்வுகளையும் செய்து வருகின்றனர். அருகில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
அதேபோல் உள்ளூர் பகுதி மக்கள் அங்கே நுழைய கூடாது என்று தடுக்கப்பட்டு உள்ளனர்.
அதிர்ச்சி
கடந்த 2020ல் ஆந்திர பிரதேசத்தில் நடந்த விஷவாயு விபத்து அப்போது நாட்டையே உலுக்கியது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருக்கும் எல்ஜி பாலிமர் ரசாயன தொழிற்சாலையில் கடந்த 2020 மே 8ம் தேதி அதிகாலை இந்த விபத்து ஏற்பட்டது.
ஆலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக அதிகாலை 3 மணிக்கு விஷவாயு கசிந்தது. இந்த விஷவாயு கசிவு காரணமாக 10க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications