Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்பப்பா எத்தனை எத்தனை பஞ்சாயத்து- பஞ்சாப் சட்டசபை தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது!

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. பஞ்சாப் சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது டெல்லி,பீகார், உ.பி. அரசியல்வாதிகள் குறித்து முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி பேசிய விவகாரம் மிகப் பெரும் சர்ச்சையாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

பஞ்சாப்பில் மொத்தம் 117 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 117 தொகுதிகளுக்கும் பிப்ரவரி 14-ந் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் முதலில் அறிவித்தது. ஆனால் பிப்ரவரி 16-ல் குரு ரவீந்திரதாஸ் பிறந்த நாளை முன்னிட்டுபங்கேற்க பஞ்சாபிலிருந்து வாரணாசிக்கு ஏராளமானோர் செல்வார்கள்; ஆகையால் தேர்தல் தேதியை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனையேற்று பிப்ரவரி 20-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

கணிப்புகள் சொல்வது என்ன?

கணிப்புகள் சொல்வது என்ன?

பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. 3-வது இடத்தில் சிரோமணி அகாலிதளம், 4-வது இடத்தில் பாஜக உள்ளது. பஞ்சாப் தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் அனைத்தும் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்புள்ளது; ஆம் ஆத்மி கட்சியானது காங்கிரஸை விட சில இடங்கள் கூடுதலாக பெறக் கூடும் என தெரிவித்துள்ளன.

தலைவர்கள் பிரசாரம்

தலைவர்கள் பிரசாரம்

பஞ்சாப் சட்டசபை தேர்தல் பிரசார களம் தொடக்கம் முதலே அனலடித்துக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி, முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி, மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் நவ்ஜோத்சிங் சித்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் என அத்தனை தலைவர்களும் அனல் தெறிக்கும் பிரசாரத்தை கையில் எடுத்தனர்.

வட இந்தியாவில் சர்ச்சை

வட இந்தியாவில் சர்ச்சை

கடந்த சில நாட்களாக வட இந்தியாவையே முதல்வர் சரண்ஜித்சிங் சன்னியின் பேச்சுதான் உலுக்கி எடுத்து வருகிறது. பிரியங்கா காந்தியுடன் ஒரே மேடையில் பேசிய சரண்ஜித்சிங் சன்னி, பிரியங்கா காந்தி பஞ்சாப்பின் மருமகள்; பஞ்சாபியர்களே ஒன்று சேருங்கள்; டெல்லி, உ,பி, பீகார் பையாக்கள் பஞ்சாப்பை ஒருபோதும் ஆள முடியாது என்றார். இதனை கைதட்டி வரவேற்ற பிரியங்கா காந்தி, சிலர் பஞ்சாப் மாநிலத்துக்கு வந்தால் தலைப்பாகை அணிகிறார்கள். அப்படி தலைப்பாகை அணிந்தாலே சர்தார் ஆகிவிட முடியாது என பிரதமர் மோடியை சாடினார்.

பிரசாரம் இன்றுடன் ஓய்வு

பிரசாரம் இன்றுடன் ஓய்வு

இத்தகைய பேச்சுகள் உ.பி, பீகார், டெல்லி அரசியலை தகிக்க வைத்துள்ளது. பீகாரில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங் சனிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய பிரசாரங்கள் அனைத்தும் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. நாளை மறுநாள் 117 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பஞ்சாப் எல்லை மாநிலம் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையம் அனைத்து தரப்பு பாதுகாப்பு படையினரை உள்ளடக்கிய 1,000 விரைவு செயல்பாட்டு படையணியையும் உருவாக்கி உள்ளது. 700 கம்பெனி துணை ராணுவத்தினர் பஞ்சாப் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+