பஞ்சாப் ராணுவ முகாம் துப்பாக்கி சூடு.. கொல்லப்பட்ட 4 பேரில் 2 பேர் தமிழர்கள்.. அதிர்ச்சி சம்பவம்
சண்டிகர்: பஞ்சாப் ராணுவ முகாமில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 தமிழக வீரர்கள் மரணம் அடைந்துள்ளனர் .
நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் பலியான 4 பேரில் 2 வீரர்கள் தமிழர்கள் என்பது தெரிய வந்துள்ளது. பஞ்சாப் பதிண்டாவில் உள்ள முகாமில் இந்த சம்பவம் நடந்து உள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த கமலேஷ், யோகேஷ்குமார் ஆகியோர் துப்பாக்கி சூட்டில் பலியாகி உள்ளனர். துப்பாக்கி சூடு தீவிரவாத தாக்குதல் கிடையாது என்று காவல்துறை நேற்றே விளக்கம் அளித்துள்ளனர்.துப்பாக்கி சூட்டிற்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

துப்பாக்கிச்சூட்டில் தமிழ்நாட்டை சேர்ந்த கமலேஷ், யோகேஷ்குமார் மோசமாக காயம் பட்டு, குண்டுகள் துளைக்க உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த கமலேஷ் மேட்டூர் அருகே வனவாசி பனங்காடு பகுதியை சேர்ந்தவர் என்று ராணுவம் சார்பாக தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.
அதேபோல் பலியான மற்றொரு வீரர் யோகேஷ்குமார் தேனி மாவட்டம் மூணாண்டிபட்டியை சேர்ந்தவர் என்றும் தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. பஞ்சாப்பில் ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இப்படி ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக தமிழக வீரர்கள் இருவர் மரணம் அடைந்த சம்பவம் அவர்களின் கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராணுவ வீரர்கள் ரோந்தில் பயன்படுத்தும் INSAS துப்பாக்கி மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. ராணுவ முகாமில் இருக்கும் ஒருவரோ அல்லது சிலரோ இதை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. போலீசார் அங்கே தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது கண்டிப்பாக தீவிரவாத தாக்குதல் கிடையாது என்று போலீசார் விளக்கம் அளித்துவிட்டனர்.
முதலில் INSAS துப்பாக்கி காணாமல் போய் இருந்தது. அதன்படி போலீசார் தீவிரமாக தேடி, தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட INSAS துப்பாக்கியை கண்டுபிடித்தனர்.
அங்கே இருக்கும் சிலர் மாஸ்க் அணிந்து இந்த துப்பாக்கி சூட்டை நடத்தி உள்ளனர். உள்ளே வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அல்லது கருத்து வேறுபாடு காரணமாக இந்த தாக்குதல் நடந்ததா என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.

அதிகாலை 4.20 மணிக்கு இந்த தாக்குதல் நடந்து உள்ளது. அதனால் இது கோபத்தில் நடந்த தாக்குதல் கிடையாது. கண்டிப்பாக திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட 2 தமிழர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications