பாக். எல்லைக்கு வெடிகுண்டை எடுக்க வந்த தீவிரவாதி! திடீரென குண்டு வெடித்ததால் உயிரிழப்பு! என்ன நடந்தது
சண்டிகர்: எல்லையோர மாநிலமான பஞ்சாபில் அமிர்தசரஸ் பகுதியில் திடீரென இன்று குண்டுவெடிப்பு ஏற்பட்டது. பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை எடுக்கச் சென்ற தீவிரவாதி அதைத் தவறாகக் கையாண்டதால் அது வெடித்துச் சிதறியுள்ளது. இதில் அந்த தீவிரவாதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து எல்லையோர மாநிலங்கள் ஹை அலர்ட் மோடில் இருக்கிறது. அங்கு எல்லா நடவடிக்கைகளும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே எல்லை மாநிலங்களில் ஒன்றான பஞ்சாபில் குண்டுவெடிப்பு அரங்கேறியுள்ளது.

குண்டுவெடிப்பு
பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் பைபாஸ் சாலை அருகே இன்று திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதில் ஒருவர் படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருப்பினும், அங்கு அவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளன.
அதாவது உயிரிழந்த நபர் பப்பர் கல்சா என்ற காலிஸ்தான் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அமிர்தசரஸ் பைபாஸ் சாலை அருகே வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டு இருக்கிறது. அதை எடுக்கவே பப்பர் கல்சா தீவிரவாதி அங்குச் சென்றிருக்கிறார். வெடிகுண்டை எடுக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக அது அவரது கையிலேயே வெடித்துச் சிதறியிருக்கிறது. இதையடுத்து சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அங்குச் சிகிச்சை பலனில்லாமல் அவர் உயிரிழந்தார்.
என்ன நடந்தது!
பஞ்சாபில் அமிர்தசரஸ் ரூரல் மாவட்டத்தில் உள்ள காம்போ அடுத்துள்ள நௌஷேரா கிராமத்திற்கு அருகே இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது.. வெடிகுண்டை எடுக்கும்போது அவரது கையிலேயே குண்டு வெடித்ததால் அவரது கைகள் துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். இது தொடர்பாகத் தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், அந்த பகுதியில் வேறு யாரும் வராதபடி தடுப்புகளை அமைத்தனர்.
அங்கு வேறு எதாவது வெடிகுண்டுகள் இருக்கிறதா என்ற சோதனையிலும் இறங்கியுள்ளனர். இந்த குண்டுவெடிப்பால் அங்குப் புகை மூட்டம் காணப்படுகிறது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது.

பஞ்சாப் போலீசார்
இந்தச் சம்பவம் நடந்தபோது இதில் தீவிரவாதிகளுக்குத் தொடர்பு இல்லை என்றே போலீசார் கூறினர். அந்த நபர் குப்பையைச் சேகரிக்கும் வியாபாரி என்றும் பழைய உலோக குப்பையை எடுக்க வந்த போது பழைய குண்டு வெடித்திருக்கலாம் என்றே முதலில் கூறினர். ஆனால், தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையிலேயே உயிரிழந்தவர் தீவிரவாதி என்பது தெரிய வந்தது.
இது தொடர்பாக அமிர்தசரஸ் ரூரல் மூத்த காவல்துறை அதிகாரி மணிந்தர் சிங் கூறுகையில், "அந்த தீவிரவாதி வெடிகுண்டை எடுக்க வந்தபோது அது எதிர்பாராத வகையில் வெடித்துச் சிதறி இருக்கிறது. அந்த நபருக்குப் பயங்கரவாதக் குழுவுடன் தொடர்பு இருக்கிறது. அந்த தீவிரவாதி பப்பர் கல்சா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்றே நினைக்கிறோம்..
தீவிர விசாரணை
பொதுவாக இதுபோல கைவிடப்பட்ட குப்பைகளைக் கொட்டும் பகுதிகளில் தீவிரவாதிகள் தங்கள் பொருட்களை மறைத்து வைப்பதும், அதை எடுக்க வருவதையும் கடந்த காலங்களில் நாம் பார்த்திருக்கிறோம். அதுபோன்ற சம்பவமே இப்போது நடந்துள்ளது. வெடிகுண்டை தவறாகக் கையாண்டதால் அது வெடித்துவிட்டதாகச் சந்தேகிக்கிறோம்" என்றார்.
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் பின்னணியில் வேறு சிலர் இருக்கிறார்களா.. இது பெரிய தீவிரவாத தாக்குதல் திட்டத்தின் ஒரு பகுதியா என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். கடந்த மார்ச் மாதம் தான் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் பஞ்சாபில் தடைசெய்யப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பான பப்பர் கல்சாவுடன் தொடர்புடைய 15 இடங்களில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications