ஏன்டா குடும்பத்துல 9 பேர் இருந்தும் எனக்கு 5 ஓட்டுதானா.. "அவசரப்பட்டு" குமுறி குமுறி கதறிய சுயேச்சை!
அமிருதசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் வேட்பாளர் ஒருவர் தன் குடும்பத்தில் 9 பேர் இருந்து வெறும் 5 ஓட்டுக்கள் பெற்றதால் கதறி கதறி அழுத சம்பவம் வைரலானது. ஆனால் அவர் உணர்ச்சிவசப்பட்டு அவசரப்பட்டுவிட்டார் என்பது தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தை பார்த்த போது தெரிந்துவிட்டது.
லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. நாடு முழுவதும் 542 தொகுதிகளில் எண்ணப்பட்ட வாக்குகளில் 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது.
பொதுவாக ஒரு தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம் என விட வேண்டும். தோல்விக்கு சிறிதாக ஒரு வருத்தப்படலாம்.

விம்மி விம்மி
ஆனால் பஞ்சாப் லோக்சபா தேர்தலில் ஒரு சுயேச்சை வேட்பாளர் தோல்வியுற்றதற்கு அழுதார். எப்படி விம்மி விம்மி அழுதார் தெரியுமா. சரி வாங்க விஷயத்துக்குள்ள போவோம். ஜலந்தரை சேர்ந்தவர் நீது சட்டர்ன் வாலா. இவர் சுயேச்சை வேட்பாளராக களம் கண்டார். இதையடுத்து தொகுதி முழுவதும் சுற்றித் திரிந்து வாக்கு சேகரித்தார்.

அழுத வேட்பாளர்
இன்று வாக்கு எண்ணிக்கையில் இவருக்கு ஏராளமான வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்த்த இவருக்கு ஏமாற்றம்தான் விஞ்சியது. வெறும் 5 ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்தாதல் செய்தியாளர்களிடம் விம்மி விம்மி அழுதார்.

எப்படி 5 ஓட்டுக்கள்
பின்னர் அவர் கூறுகையில் எனக்கு வெறும் 5 ஓட்டுக்களே விழுந்துள்ளது. என் குடும்பத்திலேயே வாக்காளர்கள் 9 பேர் இருக்கும் போது எனக்கு எப்படி 5 வாக்காளர்கள் விழும் என கேள்வி எழுப்பினார். அதற்கு செய்தியாளர்கள் உங்கள் குடும்பத்திலேயே உங்களுக்கு ஆதரவு அளிக்காத நிலையில் மக்கள் ஆதரவை எப்படி எதிர்பார்க்கிறீர்கள் என கேட்டனர்.

வெற்றி பெறக் கூடாது என சதி
பின்னர் கண்களை துடைத்து கொண்டு ஒரு பதில் அளித்தார் பாருங்க. செய்தியாளர்களுக்கு சிரிப்பதா இல்லை இவரது அப்பாவித்தனத்தை கண்டு வருந்துவதா என தெரியவில்லை. இவர் கூறுகையில் நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்கான சதி இது.

இனி போட்டியில்லை
என் குடும்பத்தினர் எனக்குத்தான் வாக்களித்திருப்பார்கள். அப்படியிருக்கும் போது வெறும் 5 வாக்குகள் கிடைத்துள்ளது என்றால் என்ன அர்த்தம், வாக்கு பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்துவிட்டனர். என்னை ஏமாற்றிவிட்டனர் என்ற அவர் கடைசியாக ஒன்று சொன்னார் பாருங்க.. "இனி நான் எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்"

856 வாக்குகளாம்
நீது கதறி அழுத வீடியோ வைரலானது. இதையடுத்து அவர் பெற்ற வாக்குகள் எத்தனை என்பதை பார்க்க இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிட்டதில் நீது 856 வாக்குகளை பெற்றது தெரியவந்தது. இறுதி முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன்னே நீது அவசரப்பட்டு தனக்கு 5 வாக்குகள் மட்டுமே கிடைத்துவிட்டதாக அழுததும் தெரியவந்தது. ஜலந்தர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 19-ஆவது இடத்தை நீது பிடித்ததும் தெரியவந்தது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications