பஞ்சாப் தேர்தல்.. இரு தொகுதிகளில் களமிறங்கும் சரண்ஜித் சிங் சன்னி.. முதல்வர் வேட்பாளராவது உறுதி?
சண்டிகர்: பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலில் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி இரண்டு தொகுதிகளில் போட்டியிடவுள்ளார்.
பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 10ம் தேதி துவங்கி பல கட்டங்களால நடைபெற உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 தொகுதிகளுக்கு வரும் பிப்ரவரி மாதம் 14-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

தேர்தல்
சீக்கிய மத குருக்களில் ஒருவரான குரு ரவிதாஸ் ஜெயந்தி ஆண்டுதோறும் பிப்ரவரி 10 முதல் 16 வரை கடைபிடிக்கப்படுவதால், அந்த சமயத்தில் தேர்தல் வைத்தால் சீக்கியர்கள் வாக்கு குறையும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 14-ம் தேதிக்கு பதிலாக பிப்ரவரி 20-ம் தேதி நடைபெறும் என அறிவித்தது தேர்தல் ஆணையம்.

பாஜக
இதையடுத்து ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ், அதை தக்க வைக்க பெரு முயற்சி எடுத்து வருகிறது. காங்கிரசில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கிய முன்னாள் முதல் மந்திரி அமரீந்தர் சிங், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறார். காங்கிரசுக்கு இந்தக் கூட்டணி கடும் சவாலை அளிக்கும் எனத் தெரிகிறது. அதே போல டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டமும் பாஜக-வுக்கு பின்னடைவை கொடுக்கும் எனத் தெரிகிறது.

காங்கிரஸ்
இதற்கிடையே, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 தொகுதிகளில் முதற்கட்டமாக 86 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி 2 கட்டங்களாக வெளியிட்டது. அதில் முதலமைச்சர் சரண் ஜித் சன்னி சாகிப் தொகுதியிலும், நவ்ஜோத் சிங் சித்து கிழக்கு அமிர்தசரஸ் தொகுதியிலும், சோனு சூட்டின் சகோதரி மாளவிகா சூட், மோகா தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

3வது பட்டியல்
இந்நிலையில், பஞ்சாப் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 8 பேர் கொண்ட 3-வது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது. இதில் பஞ்சாப் முதல் மந்திரி சரண்ஜித் சிங் சன்னி பதூர் தொகுதியில் போட்டியிட உள்ளார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. முதற்கட்டமாக வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் முதலைமைச்சர் சரண்ஜித் சிங் சாகிப் தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இரண்டு தொகுதிகள்
இந்நிலையில், 3வது பட்டியலிலும் முதல்வர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து இரண்டு தொகுதிகள்ளில் போட்டியிடுகிறார் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி. தற்போதைய முதல்வருக்கு இரண்டு தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டிருப்பதையடுத்து, மீண்டும் முதல்வர் வேட்பாளர் சரண்ஜித் சிங் தான் என்று அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications