சரண்ஜித்தை இறக்கிய காங்! சித்துவின் "சித்து" வேலைக்கு மசியாத ராகுல் -ஏன் துணிச்சலான முடிவு தெரியுமா?
சண்டிகர்: பஞ்சாப்பில் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் மறைமுக அழுத்தங்கள், சிக்னல்களுக்கு மசியாமல் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி முதல்வர் சரண்ஜித் சிங் சித்துவை மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளார்.
பஞ்சாப்பில் பெரும் போராட்டத்திற்கு பின் காங்கிரஸ் கட்சி முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளது. கடந்த இரண்டரை வருடமாகவே அங்கு ஆட்சியில் நிறைய குழப்பங்கள் நிலவி வந்தன. அங்கு காங்கிரஸ் கட்சி சார்பாக முதல்வராக இருந்த கேப்டன் அம்ரிந்தர் சிங்கை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சரண்ஜித் சிங் சித்து கோரிக்கை விடுத்து வந்தார்.
தன்னை முதல்வராக்க வேண்டும் என்று சித்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில்தான் அங்கு ஆட்சி ஆட்டம் கண்டது. பல எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் சித்துவிற்கு ஆதரவாக இருந்த நிலையில் அம்ரிந்தர் சிங்கை ஆட்சியில் இருந்து நீக்க வேண்டிய கட்டாயம் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு ஏற்பட்டது.

சோனியா காந்தி
இதையடுத்து சோனியா காந்தியையும், சித்துவையும் விமர்சனம் செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து அம்ரிந்தர் சிங் வெளியேறினார். இதையடுத்து அவர் பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்று தனி கட்சியை தொடங்கியது வேறு கதை. இந்த நிலையில் அம்ரிந்தர் சிங் இல்லாமல் காங்கிரஸ் என்ன செய்யும், வலுவான முதல்வர் வேண்டுமே என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் , காங்கிரஸ் தலைமை புத்திசாலித்தனமாக செயல்பட்டு சரண்ஜித் சிங் சன்னியை முதல்வராக அறிவித்தது. சித்தவிற்கு இது இடியாக அமைந்தது.

தலித்
தலித் பின்னணியை கொண்டவர், சித்துவிற்கும் நெருக்கம் ஆனவர், எம்எல்ஏக்களை அரவணைத்து செல்ல கூடியவர் என்பதால் காங்கிரஸ் இவருக்கு டிக் அடித்தது. ஆனால் இவர் தற்காலிக தேர்வாகவே பார்க்கப்பட்டார். அதாவது தேர்தல் வரை இடைக்கால முதல்வர்.. பின்னர் சித்துதான் முதல்வர் வேட்பாளர் என்றுதான் பலரும் நினைத்தனர். ஏன் சித்துவும் அந்த கனவில்தான் இருந்தார். ஆனால் சரண்ஜித் சிங் சன்னிக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகியது.

சிங்
ஒரு பக்கம் தலித் மக்களின் ஆதரவு பெருகியது. பாஜக இவரை நேரடியாக அட்டாக் செய்ய தொடங்கியதிலேயே சரண்ஜித் சிங் சன்னிக்கு ஆதரவு உயர்ந்தது கண்கூடாக தெரிந்தது . அதோடு ஆம் ஆத்மி கட்சியும் இவரை நேரடி போட்டியாக பார்த்தது. தொடக்கத்தில் இவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் வரும் "நைட் வாட்ச் மேன்" போல பார்த்த காங்கிரஸ் அதன்பின்தான் இவரை சீரியஸாக எடுத்தது. அந்த சமயத்தில்தான் பிரதமர் மோடிக்கு பஞ்சாப்பில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

சிறப்பான சம்பவம்
அதை சரண்ஜித் சிங் சன்னி எப்படி எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவருக்கு இது பெரிய ஆசிட் சோதனையாக பார்க்கப்பட்டது. இதை மட்டும் தாண்டிவிட்டார்.. பார்க்கலாம் என்றுதான் காங்கிரசும் நினைந்து. ஆனால் இதில் சரண்ஜித் சிங் சன்னி சிக்ஸர் அடித்தார். மோடி மீது விமர்சனம் , விவசாயிகளுக்கு ஆதரவு, சாலையில் இறங்கி விவசாயிகளை சந்தித்தது என்று சரண்ஜித் சிங் சன்னி இந்த விவகாரத்தை மிக சிறப்பாக எதிர்கொண்டு ஸ்கோர் செய்தார். கூட்டம் இல்லாததால் மோடி திரும்பி விட்டார் என்று இந்த பிரச்னையை சிறப்பாக சன்னி எதிர்கொண்டார். அதோடு கட்சிக்குள் சித்து கொடுத்த சில அழுத்தங்களையும் ஸ்மார்ட்டாக சன்னி எதிர்கொண்டார்.

எதிர்பார்க்கவில்லை
சரண்ஜித் சிங் சன்னி இப்படி சிறப்பாக செயல்படுவார் என்று காங்கிரஸ் தலைமையே நினைக்கவில்லை. அதிலும், பஞ்சாப்பில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் முதல்வர் சரண்சித் சிங் சன்னி அங்கு உள்ள தேரா மடம் ஒன்றில் இரவு முழுக்க தங்கியது கவனம் பெற்றுள்ளது. தேரா சாக்காண்ட் பல்லான் அமைப்பு சீக்கியர்கள் வணங்கும் குரு ரவிதாஸ் மூலம் தொடங்கப்பட்ட அமைப்பு ஆகும் இது.

சிறப்பான மூவ்
பஞ்சாப்பில் வலிமை வாய்ந்த தேரா அமைப்புகளில் ஒன்றாக தேரா சாக்காண்ட் பல்லான் அமைப்பு பார்க்கப்படுகிறது. இந்த அமைப்பில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பலர் உறுப்பினர்களாக உள்ளனர். பஞ்சாபில் டோபா மண்டலத்தில் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் முக்கிய அமைப்பாக தேரா சாக்காண்ட் பல்லான் உள்ளது. இங்குதான் சன்னி தங்கினார்.. சன்னியின் இந்த மூவ் தேசிய அளவில் கவனம் பெற்றது. பஞ்சாப் அரசியலில் தலித் வாக்குகளை அள்ளும் மூவாக இது பார்க்கப்பட்டது.

சித்து
இதனால் காங்கிரஸ் இவரைத்தான் முதல்வர் வேட்பாளராக டிக் அடிக்கும் என்பது உறுதியானது.. காங்கிரசுக்கு இதைவிட கைதேர்ந்த அரசியல்வாதி அங்கு கிடைப்பது கஷ்டம். ஆனால் இன்னொரு பக்கம் சித்துவோ தனக்கு முதல்வர் பதவி வேண்டும் என்று மறைமுக அழுத்தம் கொடுத்து வந்தார். மேலே இருப்பவர்கள் வீக்கான சிஎம் வேண்டும் என்று நினைக்கிறார்கள். தனது சொல்லுக்கு ஆடும் வீக்கான சிஎம் வேண்டும் என்று தலைமை நினைக்கிறது என்று ராகுல் காந்தியை சித்து மறைமுகமாக தாக்கினார்.

எம்எல்ஏ ஆதர்வாவு
சித்துவிற்கு இப்போதும் எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. அம்ரிந்தர் சிங்கையே தூக்கியவர் சித்து. அந்த அளவிற்கு அரசியல் நுணுக்கம் தெரிந்தவர் அவர். ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் ராகுலும் காங்கிரஸ் தலைமையும் தற்போது சன்னியை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது . காங்கிரஸ் பெரிதாக எதையும் பற்றி கவலைப்படவில்லை.

துணிச்சல்
சன்னி நன்றாக ஆட்சி செய்கிறார் என்பதை தாண்டி.. தலித் வாக்கு வங்கி இந்த தேர்வுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். பஞ்சாப்பில் 30 சதவிகிதத்திற்கும் அதிகமாக தலித் மக்கள், சிறுபான்மையினர் உள்ளது குறிப்பிடத்தக்கது. சித்துவின் எதிர்ப்பை மீறி.. புதிய முகமாக இருந்தாலும்.. கடந்த சில மாத ஆட்சி மீதான நன்மதிப்பு காரணமாக சன்னியை முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் துணிச்சலாக அறிவித்துள்ளது.. பார்க்கலாம் இந்த அறிவிப்பு எந்த அளவிற்கு அவர்களுக்கு உதவுகிறது!












Click it and Unblock the Notifications