ஹோட்டலில் கள்ளக்காதலனுடன் உல்லாசம் அனுபவித்த மனைவி.. ஜிபிஎஸ் கருவியால் கண்டுபிடித்த கணவன்.. கதறல்
சண்டிகர்: மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர், அவரது ஸ்கூட்டரில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தினார். இந்நிலையில் வீட்டை விட்டு சென்ற மனைவி போன் செய்தும் எடுத்து பேசவில்லை. இதனால் கணவர் ஜிபிஎஸ் கருவி காட்டிய ஹோட்டலுக்கு சென்றபோது அங்கு அவரது மனைவி கள்ளக்காதலனுடன் இருப்பதை கண்டுபிடித்தார். அதோடு தனது கள்ளக்காதலனை சகோதரர் என அடிக்கடி வீட்டுக்கு அழைத்து கணவரின் குடும்பத்தினரையே ஏமாற்றியதும் அம்பலமாகி உள்ளது.
பஞ்சாப் மாநிலம், அம்ரித்சாரை சேர்ந்தவர் ரகு (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் தேதி திருமணம் நந்தது. திருமணமான புதிதில் கணவன், மனைவி மகிழ்ச்சியாக வாழ்க்கையை தொடங்கினர்.

இந்நிலையில் தான் ரகுவிற்கு தனது மனைவி ராணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர் கள்ளக்காதலில் இருப்பதாக சந்தேகம் அடைந்தார். இதனால் தனது மனைவியின் நடத்தையை கண்காணிக்க அவரது ஸ்கூட்டரில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தினார். இந்த கருவியின் மூலமாக மனைவி எங்கெங்கு செல்கிறார் என்பதை அவருக்கு தெரியாமலேயே ரகு கண்காணித்து வந்தார்.
சம்பவத்தன்று மதியம் ராணி வீட்டில் இருந்து தனது ஸ்கூட்டரில் வெளியே சென்றார். அதன்பிறகு அவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் ரகுவிற்கு சந்தேகம் ஏற்பட்டது. மனைவிக்கு போன் செய்து பார்த்தார்.
20 முறை போன் செய்தும் அவர் எடுத்து பேசவில்லை. இதையடுத்து ஜிபிஎஸ் கருவியின் மூலமாக மனைவியின் ஸ்கூட்டர் இருக்கும் இடத்துக்கு சென்றார். அது தனியாருக்கு சொந்தமான ஹோட்டலாகும்.
அங்கு அவர் தனது மனைவியை தேடிப்பார்த்தார். அப்போது அவர் கண்ட காட்சி அதிர வைத்தது. ராணி தனது கள்ளக்காதலுடன் சேர்ந்து இருந்தார். அதோடு ராணியுடன் உல்லாசம் அனுபவித்த நபர் ரகுவின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றதும், அந்த நபரை ராணி தனது சகோதரர் என்று குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்து கள்ளக்காதலை வளர்த்ததும் தெரியவந்தது.
இதனால் அதிர்ந்துபோன ரகு உடனடியாக ராணியின் குடும்பத்துக்கு போன் செய்து சம்பவம் பற்றி தெரிவித்தார். ஆனால் அவர்கள் கண்டுக்கொள்ளவில்லை. இதனால் ரகு தனது மனைவியை ஏற்க மறுத்தார்.
இதுபற்றி ரகு கூறுகையில், ‛‛கடந்த 2010ம் ஆண்டில் எங்களுக்கு திருமணம் நடந்தது. எனது மனைவியின் கள்ளக்காதலை 2018 ல் கண்டுபிடித்தேன். இதுபற்றி அவரதுகுடும்பத்தினரிடம் கூறினேன். குடும்பத்தினருடன், எனது மனைவியும் மன்னிப்பு கேட்டனர். எனக்கு பிள்ளைகள் சிறு குழந்தைகளாக இருந்தனர்.
இதனால் மனைவியை மன்னித்து ஏற்றுக்கொண்டேன். அதன்பிறகும் கூட எனது மனைவி திருந்தவில்லை. அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் தான் ஸ்கூட்டரில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தி கண்காணித்தேன். இப்போது ஹோட்டலில் கள்ளக்காதலனுடன் இருந்தபோது கையும், களவுமாக சிக்கி உள்ளார்'' என்று கூறி கதறி அழுதார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications