மஞ்சள் டிரஸ்ஸில் கல்யாண பெண்.. காரில் எட்டிப்பார்த்த போலீஸ் ஆபீசர்.. அடுத்து நடந்ததுதான் செம ஹைலைட்
சண்டிகர்: போக்குவரத்து போலீசாரிடம் மணமகள் ஒருவர், டிராபிக்கில் சிக்கிகொண்டார். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதைப்பார்த்த நெட்டிசன்களும் ஏராளமான கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.
எத்தனையோ திருமணங்கள் தாலி கட்டுவதற்கு கடைசி நொடிகளில் நின்றுபோய்விடுகின்றன. அதிலும் வடமாநிலங்களில் திருமணங்களை, மணப்பெண்களே நிறுத்தி விடுகிறார்கள். இதற்கு எத்தனையோ காரணங்கள் உள்ளன.

உதாரணத்துக்கு மாப்பிள்ளை வாய்ப்பாட்டை சொல்லாதது, உருது வார்த்தைகளை சொல்லாதது என்ற வினோத காரணங்களை மணமகள்கள் அடுக்குகிறார்கள். சில சமயம், மணமகனோ அல்லது மணமகளோ ஓடிப்போய்விடுவதால், திருமண வீடே, களேபரமாகி, கல்யாணம் நின்றுபோன சம்பவங்களும் உண்டு.
விநோத திருமணம்: அதேபோல, விநோதமான திருமண நிகழ்வுகளும் இணையத்தில் வைரலாவதுண்டு.. இவைகளில் பல திருமணங்களில், நடக்கும் காமெடிகள், வீடியோவாக வெளிவந்து, இணையவாசிகளை ரசிக்க செய்யும்.. இதில் பெரும்பாலும், திருமண விழாவில் நடன நிகழ்ச்சியின் வீடியோக்கள் அடிக்கடி வைரலாகின்றன.
இந்நிலையில், பஞ்சாப் மணமகள் ஒருவர், இணையவாசிகளின் கவனத்தை பெற்று வருகிறார்.. அந்த மணமகள் பெயர் ஏஞ்சல் அரோரா.. இவருக்கு சமீபத்தில்தான் திருமணமானது..
மணப்பெண்: அன்றைய தினம், திருமண மண்டபத்துக்கு செல்வதற்கு முன்பு, மஞ்சள் நிற ஆடை, அலங்காரங்களுடன் தயாராகியிருக்கிறார்.. ஹால்டி விழாவிற்கு தயாராகி, மண்டபம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது போக்குவரத்து விதிகளை மீறியதற்காக, மணப்பெண்ணின் காரை போக்குவரத்து போலீசார் திடீரென தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.
பிறகு, காருக்கு அருகில் அந்த அதிகாரிகள் நெருங்கி வந்தபோதுதான், மணப்பெண் காருக்குள் உட்கார்ந்திருப்பதை கவனித்துள்ளார்கள்.. உடனே மணப்பெண் சிரித்துக்கொண்டே, அந்த அதிகாரிகளுக்கு ஹலோ என்றார்.. பிறகு, "எனக்கு கல்யாணம் நடக்க போகிறது.. இன்று ஹல்தி நிகழ்ச்சி நடக்ககறது.. மண்டபத்துக்கு போய் கொண்டிருக்கிறேன். எனக்கு தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள்" என்று கேட்டார்.
வீடியோ: அதற்கு போலீசார், இனிமேல் இப்படி விதிமீறல் தவறு செய்ய மாட்டீர்கள்தானே? என்றார். அதற்கு மணப்பெண், கண்டிப்பாக மாட்டேன் என்றார்.. அதற்கு பிறகு போலீசார் அந்த காரை செல்ல அனுமதித்தனர்.. மணப்பெண் சிரித்துக் கொண்டே, போக்குவரத்து அதிகாரிகளிடம் உரையாடுவதை, காருக்குள் இருக்கும் நபர், வீடியோ எடுத்துள்ளார்.. இந்த விடியோவை மணமகள் ஏஞ்சல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தன்னுடைய காரை போலீசார் நிறுத்தியதுமே மணப்பெண் ஏஞ்சலுக்கு திக்திக்கென்றாகிவிட்டதாம்.. எப்படியும் தனக்கு பெரும் அபராதம் விதிப்பார் என்றுதான் நினைத்தாராம்.
வாழ்த்துக்கள்: இந்த வீடியோவை நெட்டிசன்கள் வரவேற்றுள்ளனர்.. மணப்பெண் சிரித்துக்கொண்டே, காரை நிறுத்திய போலீஸ் அதிகாரிகளை பார்த்து ஹலோ சொல்லி வரவேற்பதும், கடைசியில் போலீசார் அனுமதி தந்ததுமே, அவருக்கு "THANK YOU, BYE" சொல்வதும் க்யூட் என்று கமெண்ட்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள். அத்துடன் மணமகளுக்கு திருமண வாழ்த்துக்களையும் சொல்லி வருகிறார்கள்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications