யுனிவர்சிட்டியை அடித்து நொறுக்கி தீவைத்த மாணவர்கள்! வலைதள பொய் செய்தியை நம்பி அட்டூழியம் - போச்சே

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: ''டேய் நம்ம பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து இருக்கிறாங்க'' என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவ ஆத்திரமடைந்த மாணவர்கள் யுனிவர்சிட்டியை அடித்து நொறுக்கி தீவைத்து எரித்தனர். கடைசியில் இதுபற்றி விசாரித்தபோது அப்படியான சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. அது சமூக வலைதளங்களில் பரவிய புரளி என்பதும் தெரியவந்துள்ளது.

punjab-university-vandalise-after-claims-student-gangraped-on-campus

இந்த சம்பவம் நடந்த இடம் பஞ்சாப். பஞ்சாப்பின் பாக்வாரா பகுதியில் தனியாருக்கு சொந்தமான 'லவ்லி புரோபஷனல்' பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்நிலையில் தான் நேற்று மாலையில் திடீரென்று 2,000க்கும் அதிகமான மாணவர்கள் ஒன்றாக திரண்டு பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

ஒரு தரப்பு மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் உள்ள பெண்கள் விடுதியின் அருகேயும், இன்னொரு தரப்பினர் பல்கலைக்கழகத்துக்கு வெளியே சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து தடைப்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன.

இந்த சமயத்தில் மற்றொரு தரப்பு மாணவர்கள் கோபமடைந்து பல்கலைக்கழகத்தை அடித்து நொறுக்கினர். ஜன்னல் கண்ணாடிகள், வகுப்பறை கதவுகளை அடித்து உடைத்தனர். பூந்தொட்டிகளை சேதப்படுத்தினர். வகுப்பறைக்குள் நுழைந்து மேஜை, இருக்கைகளை தூக்கி வீசி சேதப்படுத்தினர்.

ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கே சென்ற மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியை தீவைத்தனர். இதனால் அந்த கட்டடம் தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்தவுடன் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். தீயணைப்ப வீரர்கள் தீயை அணைத்த நிலையில் போலீசார் - பல்கலைக்கழக நிர்வாகிகள் ஆகியோர் இணைந்து மாணவர்களை சமாதானப்படுத்தினர்.

போராட்டத்திற்கான காரணம் பற்றி போலீசார் விசாரித்தனர். அப்போது தான் ஒரு தரப்பு மாணவர்கள், ''கல்லூரி வளாகத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் போராட்டம் நடத்தப்படுகிறது'' என்று தெரிவித்தார்.மற்றொரு தரப்பு மாணவர்களே, ''கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு நியாயம் கேட்டு போராட்டம் நடத்தப்படுகிறது'' என்றார்.

இந்த 2 விவகாரங்கள் பற்றி போலீசார் விசாரித்தபோது அப்படி எதுவுமே நடைபெறவில்லை என்பதும், இந்த 2 சம்பவங்களும் தொடர்பாக சமூக வலைதளங்களில் யாரோ வதந்தி பரப்பியதும், அதனை நம்பி மாணவர்கள் போராட்டத்தில் குதித்ததும் தெரியவந்துள்ளது. இதுபற்றி போலீசார் மாணவர்களிடம் எடுத்து கூறிய நிலையில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதுபற்றி சீனியர் எஸ்பி டூரா கூறுகையில், ''போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் ஒரு தரப்பினர் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி தற்கொலை செய்ததாக சொல்கின்றனர்.ஆானல் இன்னொரு தரப்பினர் மாணவி பலாத்காரம் செய்ததாக கூறுகின்றனர். இதுதான் பிரச்சனைக்கு காரணமாக உள்ளது. ஆனால் இந்த 2 குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் எந்த ஆதாரங்களும் இல்லை. இதுதொடர்பாக தனிப்பட்ட முறையில் யாரும் எங்களுக்கு புகாரும் அளிக்கவில்லை'' என்றார்.

சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியால் மாணவர்கள் ஒன்று கூடி பல்கலைக்கழகத்தை அடித்து நாறுக்கி தீயிட்டு எரித்த சம்பவம் பஞ்சாப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+