50 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடியால் அமரீந்தர்சிங் ராஜினாமா! புதிய முதல்வராகிறார் சுனில் ஜாகர்?
சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் 50 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியதால் முதல்வர் பதவியில் இருந்து அமரீந்தர்சிங் ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து புதிய முதல்வராக சுனில் ஜாகர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பஞ்சாப் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி செய்யும் காங்கிரசில் உட்கட்சி பூசல் பகிரங்கமாக வெடித்துள்ளது.
அக்கட்சியின் 50க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள், முதல்வர் பதவியில் இருந்து அமரீந்தர்சிங்கை நீக்க வேண்டும் என்று இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பினர். இதனையடுத்து வேறுவழியே இல்லாமல் இன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அமரீந்தர்சிங்.

சித்து கோஷ்டி மகிழ்ச்சி
மேலும், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக தமது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார் அமரீந்தர்சிங். இதனிடையே அமரீந்தர்சிங் பதவி விலகலை மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் நவ்ஜோத்சிங் சித்துவின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

அடுத்த முதல்வர் சுனில் ஜாகர்?
இந்த கூட்டத்தில் அடுத்த முதல்வர் யார் என்பது தொடர்பான விவாதம் களைகட்டியிருக்கிறது. தற்போதைய நிலையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரான சுனில் ஜாகர் பெயர்தான் அடிபடுகிறது. பஞ்சாப் தேர்தல் நடைபெறும் நிலையில் காங்கிரஸ் மேலிடம் ஒரு வியூகம் வகுத்துள்ளது.

காங். வியூகம்
அதாவது சீக்கியர்கள் வாக்குகளைப் பெறுவதற்காக மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நவ்ஜோத்சிங் சித்துவை நியமித்துள்ளது. சீக்கியர் அல்லாதவர் வாக்குகளைப் பெற சீக்கியர் அல்லாத சுனில் ஜாகரை முதல்வராக்க நினைக்கிறது காங்கிரஸ் மேலிடம். முதல்வர் பதவிக்கான ரேஸில் பிரதாப் சிங் பாஜ்வா பெயரும் அடிபடுகிறது.

மேலும் 2 மேலிட பார்வையாளர்கள்
மேலும் பஞ்சாப் காங்கிரஸ் விவகாரங்களை இதுவரை ஹரீஷ் ராவத்தான் பார்த்து வந்தார். தற்போது அஜய் மக்கான் மற்றும் ஹரீஷ் சவுத்ரி ஆகியோரும் பஞ்சாப் விவகாரம் குறித்து முடிவெடுக்க சண்டிகரில் முகாமிட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் அமரீந்தர்சிங்குக்கு ஆதரவாக ஹரீஷ் ராவத் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிட்டத்தக்கது.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications