தங்க கோவிலை குறிவைத்த பாகிஸ்தான்? சீனாவின் PL 15E ஏவுகணையின் கதை முடிந்தது.. பஞ்சாப்பில் அதிரடி
சண்டிகர்: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் என்பது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் பஞ்சாப்பில் ஹோசிர்பூர் பகுதியில் சீனா தயாரிப்பான பிஎல் 15 இ வகையை சேர்ந்த ஏவுகணையின் ஒரு பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பஞ்சாப்பின் தங்க கோவிலை பாகிஸ்தான் குறிவைத்து தாக்க முயற்சிக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் சீனாவின் பிஎல் 15 இ வகை ஏவுகணையின் பின்னணி குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா நேற்று பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத மையங்களை குறிவைத்து ஏவுகணை, ட்ரோன் மூலம் நம் நாடு அட்டாக் செய்தது. இதில் 100 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டனர். இதையடுத்து நம் நாட்டை குறிவைத்த ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை பாகிஸ்தான் மேற்கொண்டு வருகிறது.

மொத்தம் 15 நகரங்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் நம் நாட்டின் வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம் உதவியுடன் முறியடிக்கப்பட்டுள்ளது. அதோடு பாகிஸ்தானின் பல்வேறு இடங்களில் ட்ரோன் தாக்குதலை நம் நாடு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் பஞ்சாப் மாநிலம் ஹோசிர்பூரில் சீனாவின் தயாரிப்பான பிஎல் 15 இ ரக ஏவுகணையின் ஒரு பகுதி கிடைத்துள்ளது. நம் வான்வெளி ஏவுகணை தடுப்பு சிஸ்டம் அதன் கதையை முடித்து உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஏவுகணையை பாகிஸ்தான் தான் பயன்படுத்தி வருகிறது. அதாவது சீனா பிஎல் 15 ரக ஏவுகணையை பயன்படுத்தி வருகிறது. அதனை பாகிஸ்தான் வாங்க நினைத்தது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு என்று பிரத்யேகமாக பிஎல் 15 இ என்ற பெயரில் ஏவுகணையை சீனா வழங்கி இருந்தது. அந்த ஏவுகணையின் ஒரு பகுதி தான் தற்போது பஞ்சாப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பிஎல் 15 இ ஏவுகணை என்பது 145 கிலோமீட்டர் ரேஞ்ச் கொண்டது. இது மாக் 5 என்ற வேகத்தில் மின்னல் வேகத்தில் பாயும்.
பஞ்சாப் என்பது இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. இதனால் ஜம்மு காஷ்மீரை போல் பஞ்சாப்பிலும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. ஏற்கனவே ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் உள்ள குருத்வாரா மீது பாகிஸ்தான் ராணுவம் ஷெல் தாக்குதல் நடத்தியது. இதில் 3 சீக்கியர்கள் வரை இறந்த நிலையில் பஞ்சாப்பில் உள்ள குருத்வாரா மற்றும் தங்க கோவிலை குறிவைத்து பாகிஸ்தான் தாக்க முயற்சிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதில் பஞ்சாப் தங்கக் கோவில் என்பது ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் என்று அழைக்கப்படுகிறது. சீக்கியர்களின் முக்கிய ஆன்மிக தலமாக இது அமைந்துள்ளது. பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸ் நகரில் இந்த தங்க கோவில் என்பது உள்ளது. இது பொற்கோவில் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. இந்த அமிர்தசரஸ் என்பது இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லை அருகே அமைந்துள்ளது. அமிர்தசரஸில் இருந்து இந்தியா - பாகிஸ்தான் எல்லை என்பது 28 கிலோமீட்டர் தொலைவு தான். இதனால் அந்த கோவிலுக்கு பாதுகாப்பு என்பது அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி தொடர்பாக இன்று மாலையில் இந்தியா ராணுவ அதிகாரிகள் கர்னல் குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் கூட்டாக இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள், ‛‛பாகிஸ்தான் ஸ்ரீநகர், பூஜ், சண்டிகர், உத்தர்லாய், லூதியானா, ஃபலாடி ஆகிய இடங்களில் உள்ள பல இராணுவ முகவரிகளை பாகிஸ்தான் தாக்கியது. இந்த தாக்குதல்கள் வான்வெளி பாதுகாப்பு அமைப்புகளின் மூலம் முறியடிக்கப்பட்டது. இதன் சிதைவுகள் இப்போது மீட்கப்பட்டு வருகிறது'' என்றார். அந்த வகையில் பஞ்சாப்பிலும் பாகிஸ்தானுக்கு சொந்தமான சீனா தயாரிப்பான பிஎல் 15 இ ஏவுகணையின் ஒரு பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அதேபோல் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயலளர் விக்ரம் மிஸ்ரி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‛‛ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடுகளை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று, ஜம்மு-காஷ்மீரில் வசிக்கும் சீக்கிய சமூகத்தினரைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. பூஞ்சில் ஒரு குருத்வாரா மீது சீக்கியர்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். பூஞ்சில் மொத்தம் 16 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் எந்தவொரு தாக்குதலுக்கும் உரிய முறையில் பதிலடி கொடுக்கப்படும்'' என தெரிவித்து இருந்தது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா












Click it and Unblock the Notifications