பஞ்சாப் தேர்தல்: 92 தொகுதிகளை அள்ளிய ஆம்ஆத்மி..கெஜ்ரிவால் மாடலுக்கு கிடைத்த வெற்றி என கொண்டாட்டம்..!

Subscribe to Oneindia Tamil

சண்டிகர் : பஞ்சாப் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நிறைவடைந்துள்ள நிலையில் 92 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி பெரு வெற்றி பெற்று ஆட்சியை முதன் முறையாக கைப்பற்றியுள்ளது.

பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான கேப்டன் அமரீந்தர் சிங்கின் புதிதாக உருவாக்கப்பட்ட கட்சியான பஞ்சாப் லோக் காங்கிரஸுடன் பாஜக கூட்டணி வைத்து பஞ்சாப் தேர்தலில் போட்டியிட்டது.

ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் காரணமாக இரு அணியாக செயல்பட்டதாக புகார் எழுந்த நிலையில், அந்த குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் ஆட்சியை இழந்துள்ளார் சன்னி.

ஆம் ஆத்மி வெற்றி

ஆம் ஆத்மி வெற்றி

காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு நவ்ஜோத் சிங் சித்துதான் காரணம் எனவும், முதல்வர் சரண்ஜித் சிங் சன்னிதான் காரணம் என இரு தரப்பினரும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் பஞ்சாப் சட்டசபை தேர்தல் வெற்றி குறித்து இறுதி நிலவரங்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி 92 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றிப் பெற்றுள்ளது.

காங்கிரஸ் தோல்வி

காங்கிரஸ் தோல்வி

தொடர்ந்து, காங்கிரஸ் 18 தொகுதிகளை கைப்பற்றி 2-ம் இடத்தில் உள்ளது. பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களைவிட அதிக தொகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ளது. ஆட்சியமைக்க 59 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், 92 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி பஞ்சாபில் முதல் முறையாக ஆட்சியைப் பிடிக்கிறது.

வரலாற்றி முதன்முறை

வரலாற்றி முதன்முறை

இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்திய மாநில கட்சி ஒன்று இன்னொரு மாநிலத்தில் வெற்றிக் கொடியை நாட்டி இருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த வரலாற்று சாதனையை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி நிகழ்த்திக் காட்டி இருக்கிறது.

பாஜக 2ல் வெற்றி

பாஜக 2ல் வெற்றி

மேலும், பாஜக 2 தொகுதிகளிலும், ஷிரோமணி அகாலி தளம் 3 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுதிகளிலும், சுயேட்சை ஒரு தொகுதியிலும் வெற்றிப் பெற்றுள்ளனர். இதைத்தவிர, ஆம் ஆத்மி 42.01 சதவீத வாக்கும், காங்கிரஸ் 22.98 சதவீத வாக்குகளும், ஷிரோமணி அகாலி தளம் 18.38 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+