ஹரியானாவில் மீண்டும் பாஜக! நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தார் நயாப் சிங் சைனி
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் பாஜக முதல்வர் மனோகர் லால் கட்டார், அனைத்து அமைச்சர்களுடன் கூண்டோடு ராஜினாமா செய்திருந்தது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், பாஜக தலைவர் நயாப் சிங் சைனி தலைமையிலான புதிய அரசு, இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி பெரும்பான்மையை நிரூபித்திருக்கிறது.
ஹரியானா மாநிலத்தில் மொத்தம் 90 சட்டப்பேரவை தொகுதிகள் இருக்கின்றன. இதில் மெஜாரிட்டி பெற 46 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக 40 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும், ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களிலும், இந்திய தேசிய லோக் தள் மற்றும் ஹரியானா லோக்கித் கட்சி தலா ஒரு இடங்களில் வென்றிருந்தது. அதேபோல, சுயேட்சை வேட்பாளர்கள் 7 தொகுதிகளில் வென்றிருக்கின்றனர்.

பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஜனநாயக ஜனதா கட்சியுடன் (ஜேஜேபி) கூட்டணி வைத்து பாஜக ஆட்சியை பிடித்தது. இதற்காக கூட்டணி கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலாவுக்கு துணை முதலமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், ஜேஜேபி தனது ஆதரவை விலக்கிக்கொண்டது. எனவே நேற்று முதலமைச்சர் கட்டார் உட்பட அனைத்து அமைச்சர்களும் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.
ஆனால், நேற்று மாலையே சுயேட்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இந்த முறை முதல்வர் பொறுப்பு கட்டாரிடமிருந்து நயாப் சிங் சைனியின் கைக்கு மாறியுள்ளது.
நயாப் சிங் ஓபிசி சமூகத்தை சேர்ந்தவராவார். குருக்ஷேத்ரா எம்பியாக இருக்கும் இவரை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹரியானாவின் பாஜக மாநில தலைவராக கட்சி நியமித்திருந்தது. கடந்த 1996ம் ஆண்டிலிருந்து சைனி பாஜகவில் பணியாற்றி வருகிறார். கடந்த 2002ல் அம்பாலாவின் பாஜக இளைஞர் பிரிவின் மாவட்ட பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்திருக்கிறார். அதன் பின்னர் 2005ம் ஆண்டு அம்பாலா மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இப்படியாக கொஞ்சம், கொஞ்சமாக வளர்ந்து தற்போது மாநிலத்தின் முதலமைச்சர் பதவிக்கு வந்திருக்கிறார். இந்நிலையில், நயாப் சிங் தலைமையிலான அரசாங்கம் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்டது. ஹரியானா சட்டப்பேரவையில் காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த வாக்கெடுப்பில் பாஜக தனது பெரும்பான்மையை நிரூபித்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றிருக்கிறது.
-
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்!












Click it and Unblock the Notifications