”உங்கள் மகள் உங்களுடன்".. ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கும் வினேஷ் போகத்?
சண்டிகர்: மத்திய பாஜக அரசுக்கு எதிராக 200 நாட்களாக பஞ்சாப்- ஹரியானா எல்லையான ஷம்பு பகுதியில் முகாமிட்டு போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் நேரில் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதனால் ஹரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக வினேஷ் போகத் களமிறங்கக் கூடும் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் அக்டோபர் 1-ந் தேதி நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்து விடுத்த கோரிக்கையை ஏற்று அக்டோபர் 5-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும்; அக்டோபர் 8-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ஹரியானாவில் ஆளும் பாஜகவுக்கு எதிரான அதிருப்தி அலை வீசுவதாக கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. ஹரியானாவில் காங்கிரஸ் பக்கம் காற்று வீசுவதாகவும் அந்த கணிப்புகள் தெரிவித்து வருகின்றன. ஹரியானா தேர்தலில் விவசாயிகள் போராட்டம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
மத்தியில் ஆளும் பாஜக அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பஞ்சாப்- ஹரியானா எல்லையான ஷம்பு பகுதியில் முகாமிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி நோக்கிப் புறப்பட்ட விவசாயிகளை ஹரியானாவில் ஆளும் பாஜக அரசுதான் ஷம்பு பகுதியில் தடுத்தது. இதனால் அங்கேயே முகாமிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் பெற இயலாமல் போன மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் நேற்று ஷம்பு எல்லையில் போராடும் விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது, உங்கள் மகள் நான்.. உங்களுடன் இருக்கிறேன் என உருக்கமாகவும் வினேஷ் போகத் பேசினார். முன்னதாக விவசாயிகளின் காப் பஞ்சாயத்து கூட்டத்திலும் வினேஷ் பங்கேற்றிருந்தார்.
வினேஷ் போகத்தின் உறவினரான மல்யுத்த வீராங்கனை பபிதா போகத், பாஜகவில் இணைந்து 2019 தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜகைவ்ன் பிரிஜ் பூஷண் சிங்குக்கு எதிராக வினேஷ் போகத், தீவிரமாக போராட்டம் நடத்தினார். இதனால் வினேஷ் போகத் மீது பபிபாவுக்கு கடும் கோபமாம். பாரீஸ் ஒலிம்பிக் விவகாரத்திலும் பபிதா எந்த கருத்தும் தெரிவிக்காமல அமைதி காத்திருந்தார்.
இந்த நிலையில் விவசாயிகள் போராட்டம், விவசாயிகள் பஞ்சாயத்து கூட்டம் என அடுத்தடுத்து பங்கேற்று வரும் வினேஷ் போகத்,ஹரியானா சட்டசபைத் தேர்தலில் உறவினரான பபிதா போகத்தை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட இருக்கிறார்; இதற்காகவே விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்துள்ளார் என்கின்றனர் அம்மாநில அரசியல் வட்டாரங்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications