ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சி உறுதி! காங்கிரஸ் கட்சிக்கு ஏன் இந்த வெற்றி முக்கியம்! 5 பாயிண்டுகள்
சண்டிகர்: தற்போது வரை ஹரியானா சட்டசபைத் தேர்தல் குறித்து வெளியாகும் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் அங்குக் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கவே வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்பட்டுள்ளது. ஹரியானா வெற்றி என்பது காங்கிரஸ் கட்சிக்கு ரொம்பவே முக்கியமானது.. குறிப்பாக வட இந்தியாவில் காங்கிரஸின் கம்பேக்காக இது பார்க்கப்படும்.. இது குறித்து நாம் பார்க்கலாம்.
ஹரியானாவில் உள்ள 90 சீட்களுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இதற்கிடையே ஹரியானா தேர்தல் எக்ஸிட் போல் சர்வேக்களில் காங்கிரஸ் வெல்லவே வாய்ப்பு அதிகம் எனச் சொல்லப்படுகிறது.

இது காங்கிரஸின் வட இந்திய கம்பேக்காக அமையும். ஹரியானா வெற்றி என்பது காங்கிரஸ் கட்சிக்கு எந்தளவுக்கு முக்கியமானது என்பது குறித்து நாம் 5 பாயிண்டுகளில் பார்க்கலாம்.
முதல் பாயிண்டு: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கணிசமான இடங்களில் வென்றிருந்தது. அதன் ஒரு தொடர்ச்சியாக இந்த ஹரியானா வெற்றியாக அமையும். குறிப்பாகக் கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வட இந்தியாவில் காங்கிரஸ் செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. அதற்கு ஹரியானா வெற்றி முக்கிய பூஸ்ட் தரும். கடந்த 2019 லோக்சபா தேர்தலில் ஹரியானாவில் ஒரு இடத்திலும் காங்கிரஸ் கட்சியால் வெல்ல முடியவில்லை. அதேநேரம் 2024ல் காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு இணையாக 5 சீட்களில் வென்றது.
இந்தச் சூழலில் ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தால் அது வட இந்தியாவில் முக்கியமான வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. மாநிலங்களில் இதுபோல வரிசையாக வெல்வது தேசியளவில் காங்கிரஸ் கட்சியை வலுவாக மாற்றும். இப்போது வட இந்தியாவில் ஹிமாச்சல் பிரதேசத்தில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. அதில் ஹரியானா சேர்வது காங்கிரஸ் வளர்ச்சிக்கு முக்கியம்.
இரண்டாவது பாயிண்டு: ஹரியானா விவசாயிகள் அதிகம் இருக்கும் மாநிலங்களில் ஒன்றாகும். இது புவியியல் ரீதியாகத் தேசிய தலைநகரான டெல்லிக்கு அருகில் உள்ளதால் முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது. இங்குக் காங்கிரஸ் பெறும் வெற்றி விவசாயிகள் ஆதரவு காங்கிரஸுக்கு திரும்ப வந்துள்ளதைக் காட்டுகிறது. விவசாயிகள் போராட்டத்தின் போதே பாஜக மீது ஹரியானா விவசாயிகள் கோபம் கொண்ட நிலையில், அது இப்போது மொத்தமாகக் காங்கிரஸ் கட்சிக்குத் திரும்பியுள்ளது.
மூன்றாவது பாயிண்டு: இதில் மற்றொரு மிக மிக முக்கியமான விஷயம் தலித் மக்களின் ஆதரவு. ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிப்பதில் ஜாட் + தலித் வாக்குகள் மிக முக்கிய பங்கு வகித்து உள்ளது. ஜாட் சமூகத்தைச் சேர்ந்த பூபிந்தர் சிங் ஹூடா மற்றும் தலித் பெண் தலைவர் குமாரி செல்ஜா இருவரும் இதைச் சாத்தியமாக்கியுள்ளனர். ஹரியானாவில் சுமார் 20% தலித்கள். அவர்களின் வாக்கு காங்கிரஸுக்கு வருவது பெரிய சாதனையாகவே இருக்கும். இதில் வெற்றி கிடைத்தால் நிச்சயம் காங்கிரஸ் இதை பார்முலாவை இதர மாநிலங்களிலும் முயன்று பார்க்கும்.
பாயிண்டு 4: ஹரியானா தோல்வி என்பது பாஜக மற்றொரு முக்கிய பொருளாதார மண்டலத்தை இழப்பதை உறுதி செய்யும். ஏற்கனவே முக்கிய பொருளாதார மற்றும் டெக் நகரங்களாக உள்ள பெங்களூர் (கர்நாடகா), ஹைதராபாத் (தெலுங்கானா) நகரங்களில் பாஜக தனது பவரை இழந்துவிட்டது. அதில் என்சிஆர் பகுதியில் இருக்கும் குருகிராமும் இணையலாம்.
இந்த குருகிராமில் இருந்து 2022-23 நிதியாண்டில் கலால் வரியாக மட்டும் ஹரியானாவுக்கு ரூ. 2,600 கோடி கிடைத்தது குறிப்பிடத்தக்கது. நாட்டின் தொழில்நுட்ப மையங்கள் மெல்லக் காங்கிரஸ் பக்கம் நகர்ந்துவிட்டதையே இது காட்டுகிறது.
பாயிண்டு 5: அடுத்து மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் சில மாதங்களில் தேர்தல் நடக்கும் நிலையில், அதற்கும் நல்ல உத்வேகத்தை இந்த தேர்தல் முடிவுகள் தரும். ஏற்கனவே லோக்சபா தேர்தலில் பாஜக 3வது முறையாகத் தனிப்பெரும்பான்மை பெறுவதை இந்தியா கூட்டணி தடுத்து இருந்தது. குறிப்பாகக் காங்கிரஸ் மட்டும் 99 சீட்களில் வென்று இருந்தது.
இந்த நேரத்தில் மாநில தேர்தல்களில் வெல்வது காங்கிரஸ் மீது மக்கள் மீண்டும் நம்பிக்கை வைக்கத் தொடங்கியுள்ளனர் என்ற இமேஜை உருவாக்க உதவும். டெல்லியிலும் அடுத்தாண்டு தொடக்கத்தில் தேர்தல் நடக்கும் நிலையில், காங்கிரஸுக்கு கணிசமான சீட்கள் கிடைக்கலாம்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications