ஹரியானா "X பேக்டர்.." தேர்தலை புரட்டி போட்ட விஷயம்! அரசியலை தாண்டி சத்தமின்றி நடக்கும் மெகா மாற்றம்
சண்டிகர்: ஹரியானா தேர்தல் முடிவுகளை இப்போது அம்மாநில மக்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தேசமும் உற்று நோக்கி வருகிறது. இந்தி ஹார்ட்லேண்டில் உள்ள ஒரு மாநிலத்தில் பாஜகவைக் காங்கிரஸால் வீழ்த்த முடியுமா என்பதே இப்போதைய கேள்வி. எக்ஸிட் போல் உண்மையாகும்பட்சத்தில் அது மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் காங்கிரசுக்கு உத்வேகத்தைத் தரும்.
கடந்த 10 ஆண்டுகளாக பாஜகவின் அசைக்க முடியாத கோட்டையாக இந்தி ஹார்ட்லேண்ட் இருக்கிறது. ஆனால், சமீப காலங்களில் அங்கு களச்சூழல் மெல்ல மாறி வருகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இமாச்சல பிரதேசத்தை காங்கிரஸ் கைப்பற்றிய நிலையில், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கூட உ.பி உள்ளிட்ட மாநிலங்களில் கணிசமான இடங்களில் வென்று இருந்தது.
டிரெண்ட் தொடருமா: அந்த டிரெண்ட் இப்போது ஹரியானா சட்டசபைத் தேர்தலிலும் எதிரொலிக்கிறது. ஹரியானாவின் பாஜக கோட்டைகளான அஹிர்வால் பகுதி மற்றும் ஜிடி சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் பாஜக எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் ஹரியானாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றே கூறப்படுகிறது. எக்ஸிட் போல்களிலும் அதே தான் கூறப்பட்டுள்ளது.
பாஜக நடத்திய உட்கட்சி சர்வேயிலும் கூட காங்கிரஸுக்கு 60 இடங்களும், பாஜகவுக்கு 20 இடங்களும், பிராந்தியக் கட்சிகள் மற்றும் சுயேட்சைகளுக்கு 10 இடங்களும் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அங்கு பாஜக ஆட்சியில் இருந்த நிலையில், ஆட்சிக்கு எதிரான மனநிலையே பாஜகவுக்குப் பெரிய பின்னடைவைக் கொடுத்துள்ளது. முன்னால் முதல்வர் மனோகர் லால் கட்டர், தற்போதைய முதல்வர் நயாப் சிங் சைனி ஆகியோர் மீதான அதிருப்தியும் அதிகரித்தே இருக்கிறது.
ஜாட்கள்: ஹரியானா மக்கள்தொகையில் சுமார் 25% ஜாட்கள் தான். அவர்களின் வாக்குகள் எப்போதும் காங்கிரஸ் மற்றும் பிராந்திய கட்சிகளுக்கு இடையே பிளவுபட்டு இருக்கும். கடந்த 2 தேர்தல்களில் இது பாஜக பக்கமும் கணிசமாக வந்திருந்தது. ஆனால், இந்த முறை அவை மொத்தமாகக் காங்கிரஸ் பக்கம் சென்று இருப்பதே காங்கிரஸுக்கு பெரிய பூஸ்டை தந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த பூபிந்தர் சிங் ஹூடா தான் நிச்சயம் முதல்வராவார் என்பதால் ஜாட் ஆதரவு காங்கிரஸுக்கு எந்தவொரு சிரமமும் இல்லாமல் வருகிறது.
கடந்த 2014இல் பஞ்சாப் காத்ரி பிரிவைச் சேர்ந்த கட்டாரை முதல்வராக பாஜக தேர்வான போதே ஜாட்கள் அதிருப்தி அடைந்தனர். அதிலும் விவசாயிகள் போராட்டமும் அதை பாஜக அரசு கையாண்ட விதமும் அவர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதுவே ஹரியானாவில் பாஜகவுக்கு எதிராக ஜாட்கள் திரும்ப முக்கிய காரணமாகும்.
இந்தச் சூழலில் கடந்த ஆண்டு பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் புகாரும் அப்போது நடந்த மல்யுத்த வீரர்கள் போராட்டத்தை பாஜக கையாண்ட விதமும் ஜாட்களின் கோபத்தை அதிகப்படுத்தியது. இதை மல்யுத்த வீரர்களின் போராட்டமாக மட்டுமின்றி ஜாட் மரியாதையை மீட்டெடுப்பதற்கான போராட்டமாகப் பார்த்தனர்.
வினேஷ் போகட் எழுச்சி: இதன் காரணமாகவே ஜூலானாவில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கும் வினேஷ் போகட் பின்னால் ஜாட்கள் மொத்தமாக அணிவகுத்துள்ளனர். அவரை ஜாட் சமூகத்தின் ஒரு புதிய அடையாளமாகப் பார்க்கிறார்கள். மேலும், ஜாட் சமூகத்தில் பெண்களுக்கு அதிகாரம் இருக்காது. எப்போதும் ஆண்களே ஆதிக்கம் செலுத்துவார்கள். எனவே, வினேஷ் போகட்டிற்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது அரசியலைத் தாண்டி முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும், கடந்த தேர்தல்களிலும் கணிசமான வாக்குகளைப் பெற்ற இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி) மற்றும் ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) ஆகிய பிராந்தியக் கட்சிகள் இந்த முறை பலவீனமடைந்துள்ளன. இதுவும் காங்கிரஸ் கட்சிக்குப் பெரிய பிளஸ் பாயிண்டாக மாறி இருக்கிறது.
மக்கள் கோபம்: பொதுவாக ஜாட் மக்கள் ஆதரவு காங்கிரஸுக்கு இருக்கும். ஜாட் அல்லாதவர்கள் ஆதரவு பாஜகவுக்கு இருக்கும். கடந்த 2 தேர்தல்களிலும் பாஜக வெற்றிக்கு இதுவே கை கொடுத்தது. ஆனால், இந்த முறை ஜாட் அல்லாத பிற பிரிவினர் ஆதரவு பாஜகவுக்கு வரவில்லை. மாநில அரசுக்கு எதிரான மனநிலை இதை ஓவர்டேக் செய்துவிட்டது..
தலித்கள்: ஹரியானாவில் எக்ஸ் ஃபேக்டர் என்றால் அது தலித் மக்கள் தான். ஹரியானா அரசியலில் ஜாட்கள் ஆதிக்கம் நிறைந்து இருந்தாலும், அங்குத் தலித் மக்கள் தொகை 21% வரை இருக்கிறது. இந்த முறை தலித் மக்களின் முகமாகக் காங்கிரஸின் குமாரி செல்ஜா உருவெடுத்துள்ளார். இதுவே காங்கிரஸின் வெற்றியை உறுதி செய்கிறது.
அங்குக் காங்கிரஸ் வெல்லும் போது பூபிந்தர் சிங் ஹூடா தான் முதல்வர் என்ற போதிலும், கடந்த 2005- 2014ஐ போல அதிகாரம் மொத்தமாக அவரிடம் குவியாது. தலித் மக்களுக்கும் குறிப்பிட தகுந்த அதிகாரம் வழங்கப்படும் என்றே தெரிகிறது. எனவே, இது தேர்தல் முடிவுகள் என்பது ஹரியானாவில் வெறும் அரசியல் மாற்றத்தைத் தாண்டி ஒரு சமூக மாற்றித்தின் தொடக்கமாக இருக்கும் என்றே வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஹரியானா மாநிலத்தில் மொத்தம் 90 சீட்கள் உள்ளன. அங்கு அனைத்து தொகுதிகளுக்கும் கடந்த சனிக்கிழமை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. அதில் 67.9% வாக்குகள் பதிவானது. தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி உள்ள நிலையில், அதை தாண்டி ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications