சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ஃபுல் பவர்".. டேவிட் ஆசீர்வாதத்தை விடுங்க.. கூப்பிடுங்க பொன். மாணிக்கவேலை.. பாண்டியன் என்ன சொல்றாரு

கஞ்சா ஒழிப்பு குறித்து முக்கிய யோசனை ஒன்றை பத்திரிகையாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: பொன்மாணிக்கவேல் போன்ற நேர்மையான அதிகாரிகளிடம் குழுவையும் ஒதுக்கி பொறுப்பை தந்தால்தான், கஞ்சாவை ஒழிக்க முடியும் என்று மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் யோசனை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகமாகி உள்ளதையடுத்து, ஆப்ரேசன் கஞ்சா 2.0 என்ற திட்டத்தை தமிழக காவல்துறை கையில் எடுத்துள்ளது.. மேலும், காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு, பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.

இதன் மூலம் தமிழகம் முழுவதும் 3,562 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.. ஆனால், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையோ, இந்த விவகாரத்தில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்..

கடலூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கொடும்பாவி எரிப்பு- காலணியால் அடித்த திமுக தொண்டர்கள்!கடலூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கொடும்பாவி எரிப்பு- காலணியால் அடித்த திமுக தொண்டர்கள்!

 1.0, 2.0, 3.0

1.0, 2.0, 3.0

"இந்தியாவின் கஞ்சா தலைநகரமாக தமிழகம் மாறியுள்ளது.. தமிழகத்தில் போதை பொருட்களின் புழக்கம் உச்சத்தில் இருக்கிறது.. ஆபரேஷன் கஞ்சா : 1.0, 2.0, 3.0 என்பதெல்லாம் காவல்துறையினரின் கண்துடைப்பு நடவடிக்கைகள்.. எப்படி, எப்போது, போதை பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்துவீர்கள்? என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்.. இந்த கேள்விகளை நாம், பத்திரிகையாளர் பாண்டியனிடம் முன்வைத்தோம்.. அவர் நம் ஒன் இந்தியாவுக்கு அளித்த ஸ்பெஷல் பேட்டியில், முக்கிய கோரிக்கை ஒன்றை, தன் யோசனையாக வெளிப்படுத்தி உள்ளார். அவர் பேசியதன் சுருக்கம்தான் இது:

 ஆபரேஷன் 1.0, 2.0, 3.0

ஆபரேஷன் 1.0, 2.0, 3.0

"அண்ணாமலை சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.. உண்மை இருக்கு.. 1586 ரவுடிகளை கைது செய்துள்ளதாக சொல்கிறார்கள்.. அப்படியானால் இந்த ரவுடிகளும் களத்தில்தானே இத்தனை நாளும் இருந்திருக்கிறார்கள்? கோவை குண்டுவெடிப்பு நிகழ்வதற்கு முன்பேயே இவர்களை கைது செய்திருக்கணும் இல்லையா? ரவுடிகளே இல்லாமல் செய்திருக்க வேண்டியதுதானே? கஞ்சா விற்பவரின் வங்கி கணக்கில் பணம் எவ்வளவு புழங்குகிறது என்பது வரை இந்த மாநில அரசுக்கு எல்லாமே தெரியுது.. உளவுத்துறையிடம் இருந்து தகவல்கள் அரசுக்கு வந்துவிடுகிறது என்றால், கஞ்சா விற்றவனை தடுத்து நிறுத்தி, குண்டாசில் போட்டிருக்க வேண்டும்தானே?

 மூட்டை மூட்டையாய்

மூட்டை மூட்டையாய்

மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் கஞ்சாவுக்கு தமிழகம்தான் மார்க்கெட்.. ஆந்திராவில் இருந்து இங்கேதான் கஞ்சா வருகிறது.. மூட்டை மூட்டையாக பிடிக்கிறார்கள்.. சாமியார்கள் இந்த கஞ்சாவை அதிகம் பயன்படுத்துவார்கள்.. 50 ரூபாய்க்கு கூட கஞ்சா வாங்குவாங்க.. ஹெராயின், அபின் போன்றவை வாங்க 1000 ரூபாய் ஆயிடும்.. கேட்டமைன், அபின், ஹெராயின் மூன்றுமே சர்வதேச மார்க்கெட்டில் ஒரு கிலோ, ஒன்றரை கோடி ரூபாய்க்கு விற்கிறார்கள்.. இதை வசதிப்படுத்தவர்கள், வடஇந்திய கல்லூரி, மாணவ மாணவிகள் மட்டும்தான் உபயோகப்படுத்துவார்கள்...

 ஸ்வீட் + கொழுப்பு

ஸ்வீட் + கொழுப்பு

ஆந்திராவை தாண்டினாலே ஸ்வீட்தான் அவங்க சாப்பாடு.. இந்த கொழுப்பை கரைக்க, இந்த குட்காவைதான் பயன்படுத்துவாங்க.. 200, 300 வருஷமாக இந்த பழக்கம் உள்ளது.. தமிழகத்தில் கஞ்சா வியாபாரி நிறைய இருக்கிறார்கள்.. கஞ்சா வியாபாரி யார், எங்கே விற்பனையாகிறது என்பது, தமிழக போலீஸ் ஸ்டேஷனில் உள்ள ஏட்டையா முதற்கொண்டு எல்லாருக்குமே தெரியும்.. காசு வாங்காமல் இருக்க மாட்டாங்க.. கஞ்சா விற்பவர்கள் சாதாரணமாக கூலி நபர்களாக இருப்பார்கள், ஆனால், பெரிய பெரிய தனியார் கல்லூரிகள், பல்கலையில் பல வடமாநில மாணவர்கள் இந்த கஞ்சாவை பயன்படுத்துகிறார்கள்.

 டேவிட் ஆசீர்வாதம்

டேவிட் ஆசீர்வாதம்

இங்கே படிப்பவர்கள் எல்லாருமே பணக்கார பிள்ளைகள்தான்.. போலீசும் இங்கே உள்ளே நுழைய முடியாது.. இவர்கள் தங்கியுள்ள ஹாஸ்டலிலும் சோதனை நடத்த முடியாது.. அதனால், சாதாரண நபர்களை கஞ்சாவுக்காக ஈஸியா கைது செய்துவிடுகிறார்கள்.. உண்மையை சொல்லப்போனால் இது மிகப்பெரிய நெட்வொர்க்,. இதை ஏன் ஒழிக்க முடியவில்லை என்றால், காவலர்களுக்கு எந்த அதிகாரமும் தருவதில்லை.. சாதாரண பிராந்தி, விஸ்கியே எப்போது கேட்டாலும் கிடைக்கிறதே எப்படி? சரியாக 10 மணிக்கு யாராவது கடையை மூடறாங்களா? மதுவையே ஒழிக்க முடியாதவர்கள், எப்படி கஞ்சாவை ஒழிப்பார்கள்?

 ஷைலேந்திர பாபு

ஷைலேந்திர பாபு

கஞ்சா விற்பனை பற்றி சைலந்திபாபுவுக்கு தெரியும், டேவிட்சன் ஆசீர்வாதத்துக்கும் தெரியும்.. அவங்களுக்கு கீழே உள்ளவர்களுக்கும் தெரியும்.. ஆனால் யாரை கைது செய்ய முடியும்? கஞ்சா வாங்கிறது பூராவுமே, பெரிய வீட்டு பிள்ளைகள்தான்.. இதில், அரசியவாதி மகன்தான் மாட்டுவான், ஐஏஎஸ் அதிகாரியின் மகன் மாட்டுவான், கலெக்டர் மகன் மாட்டுவான், இதில் யாரை கைது செய்ய முடியும்? சப்ளை செய்யப்படுவதே இதுபோன்ற பிள்ளைகளுக்குதான்.. அப்படியானால் இதை யார் கண்காணிப்பது? யார் ஒழிப்பது? காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன.. யார் இவர்களுக்கு உத்தரவு போடுவது?

 பொன் மாணிக்கவேல்

பொன் மாணிக்கவேல்

எந்தவித அரசியல் தலையீடும் இல்லாமல், அதிகாரிகள் தலையீடும் இல்லாமல் சுயமாக முடிவெடுக்கக்கூடிய அதிகாரத்தை மட்டும் காவல்துறைக்கு தந்துவிட்டால் போதும், உடனடியாக கஞ்சாவை ஒழித்துவிடலாம். உதாணத்துக்கு, கோவில் சிலை திருட்டு வழக்கு தொடர்பாக, பொன்மாணிக்கவேலுக்கு அரசாங்கம் எந்தவிதமான ஒத்துழைப்பையும் அப்போது தரவேயில்லை.. அதுமட்டுமல்லாமல், அவர் மீது பல புகார்களை சொல்லி டார்ச்சர் தந்தார்கள்.. ஆனால், அவரோ ஒரு நேர்மையான அதிகாரி.. அவர் மாதிரியான அதிகாரிகளிடம் பொறுப்பை ஒப்படைத்தால், 3 மாசத்தில் கஞ்சா, அபின் எதுவுமே இங்கே இல்லாமல் செய்துவிடுவார்..

 30 டீம்கள்

30 டீம்கள்

6 ஆயிரம் சாமி சிலைகள் காணாமல் போனது, அதில் 159 சிலைகளை வெளிநாட்டிலிருந்து இருந்து மீட்டெடுக்க காரணமே பொன்மாணிக்க வேல்தான்.. 30 டீமை தந்து பொன்மாணிக்கவேலுவிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்.. அல்லது ஈஸ்வரமூர்த்தி போன்ற நேர்மையான அதிகாரிகளிடம் குழு அமைத்து உத்தரவிட வேண்டும்.. போதை வஸ்துக்களை ஊக்குவிப்பதே ஆளும் கட்சிகளும், போலீசும்தான்.. அதனால், நேர்மையானவர்களிடம் பொறுப்பை தந்து, குழுவையும் ஒப்படைத்தால் மட்டுமே இந்த போதை பொருள் நடமாட்டத்தில் இருந்து தமிழகம் மீளும்" என்றார்.

English summary
1.0, 2.0, 3.0: TN Gov should hand over the responsibility to the honest officials to eradicate ganja, says Sr Journalist Pandian
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X