ஆடு புலி ஆட்டம்".. கிட்ட கிட்ட வரும் பாமக.. திமுகவுடன் இணையும் புதுகட்சி.. "அவங்களுக்கு" நோ சான்ஸாம்
சென்னை: ஏற்கனவே மெகா கூட்டணியுடன் இருக்கும் திமுக, இனியும் பலம்வாய்ந்த கூட்டணியாக மாறலாம் என்றும் ஆனால், பாமக, தேமுதிக கூட்டணிக்கு வருவது சந்தேகம்தான் என்றும் அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.
விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில் தேசிய கட்சிகள் அதற்கு தயாராகி வருகின்றன.. அதேபோல நம் தமிழகத்திலும் தேர்தலுக்கான முனைப்புகள் காட்டப்படுகின்றன. கூட்டணி பேச்சுக்களும் மெல்ல எட்டிப்பார்க்க துவங்கி உள்ளன.
அந்தவகையில், திமுகவை பொறுத்தவரை, தற்போதுள்ள கூட்டணி உடையாது என்கிறார்கள்.. முக்கியமாக 2 இடதுசாரிகளும் திமுகவை விட்டு போக வாய்ப்பில்லை, அதேபோல, விசிக, மதிமுக, வேல்முருகன் மாதிரியான கட்சிகளும் நிச்சயம் போகாது என்று வலுவாக நம்பப்பட்டு வருகிறது.. அந்தவகையில் திமுக வலுவாகவே உள்ளது.
ஐடி நிறுவன அதிகாரி டூ திமுக! கட்சியில் தேடி வந்த மாநிலப் பொறுப்பு! பூரிப்பில் பூர்ண சங்கீதா!

வாழ்வுரிமை
எனினும், மக்கள் நீதி மய்யத்தையும் தங்களுடன் இணைத்துக் கொள்ள திமுக ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. திமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க மய்யத்தினரும் சில மாதங்களுக்கு முன்பே மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக சொன்னார்கள்.. அப்போது, டார்ச் லைட் சின்னத்தில் சுமார் 5 தொகுதிகள் வரை கேட்கப்பட்டதாம்.. ஆனால், திமுக தரப்பில் ஒரே ஒரு மக்களவை தொகுதி கொடுப்பதாகவும், அந்த தொகுதியிலும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும், தேர்தல் செலவுகளை திமுகவே ஏற்கும் என்று சொன்னதாம்.. வேண்டுமானால், கமலுக்கு நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினர் பதவி கொடுப்பதாகவும் பேசப்பட்டதாம்.

கதம் கதம்
தேர்தல் செலவுகளை ஏற்றுக் கொள்வோம் என்று திமுக சொல்வது மகிழ்ச்சியையே தந்தாலும், 2 சீட்டுக்களை பெற்று, ஒரு தொகுதியில் டார்ச் லைட் சின்னத்திலும், இன்னொரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தின் போட்டியிடலாம் என்று கமல் ஒரு கணக்கு சொன்னாராம். ஆனால், அதற்கு திமுக வேறு ஒரு கணக்கை முன்வைத்ததாம்.. ஒரு லோக்சபா தொகுதி + ஒரு ராஜ்ய சபா சீட் தருவதாக திமுக தரப்பில் மய்யத்துக்கு உறுதி தரப்பட்டதாம்.. அதாவது, கமலை ஒருபக்கம் ராஜ்யசபாவுக்கு அனுப்பி, இன்னொரு பக்கம் பிரச்சாரத்துக்கும் அனுப்ப தன் பிளானை திமுக சொன்னதாக தெரிகிறது.

மாஸ் மாஸ்
அதுமட்டுமல்ல, திமுக கூட்டணியில் கமல் இணையும்பட்சத்தில், பாஜக போட்டியிடும் தென் சென்னை அல்லது கோவையிலேயே களமிறக்க, திமுக தரப்பு திட்டமிட்டு வருவதாக சொல்கிறார்கள்.. இப்படியெல்லாம் யூகமான தகவல்கள் வந்துள்ள நிலையில், உண்மையிலேயே திமுக கூட்டணியில் கமல் இணைய போகிறாரா? அல்லது வேறு எந்த கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது? என்ற சந்தேகங்களும் வட்டமடிக்க துவங்கி உள்ளன. இந்நிலையில், அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமி ஒரு பிரபல டிவி சேனலுக்கு பேட்டி தந்துள்ளார். அந்த பேட்டியில், திமுகவில் எந்தெந்த கட்சிகள் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளன என்பது குறித்தும் அனுமானமாக கருத்தை பதிவிட்டுள்ளார்.

50% 50%
அதில், "டெல்லி பாஜகவை பொறுத்தவரை, கூட்டணி என்ற விஷயத்தில் உறுதியாக இருக்கிறார்கள்.. ஆனால், எடப்பாடி பழனிசாமியையும், ஓபிஎஸ்ஸையும் 50, 50 சதவீதமாகவே மேலிடம் ட்ரீட் செய்கிறது.. அதிலும் பிரதமர் மோடி, இவர்கள் இருவரையும் சரிசமமாகவே நடத்துகிறார்... ஆனால், எடப்பாடி சொல்லும் மெகா கூட்டணியில் பாமக இருக்குமா என தெரியவில்லை.. அதிமுக கூட்டணியை அன்புமணி மறுக்கவில்லை என்றாலும், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் மனநிலையில் அவர் இல்லை.. அதேபோல, திமுக எதிர்ப்பு என்ற விஷயத்தில் உறுதியாக உள்ள டிடிவியையும் எடப்பாடி ஏற்பது சந்தேகம்தான்.

வோட் பேங்க்
அந்தவகையில், ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற இந்த கட்சிகள் கேள்விக்குறியாக உள்ளன.. மேலும், அதிமுகவில் தலைவரும் இல்லை. மதச்சார்பற்ற கட்சிகளான விசிகவும், காங்கிரஸும் தங்கள் கூட்டணிக்கு வருவார்கள் என்று அதிமுக எதிர்பார்த்தது.. ஆனால், விசிக, காங்கிரஸ் இரு கட்சிகளுமே அப்படி ஒரு வாய்ப்பு இல்லை என்று தெளிவுபடுத்திவிட்டன.. அந்தவகையில், திமுகவில்தான் இவர்கள் உள்ளனர்.. இந்த திமுகவில், கமல் இணையலாம்.. இரண்டரை சதவீத வாக்கு வங்கியை கமல் வைத்துள்ள நிலையில், கூட்டணிக்கு நிறையவே வாய்ப்புள்ளது..

நட்பு வளையம்
வாக்கு வங்கி மட்டுமல்லாமல், திமுக மேலிடத்தில் நட்பு வளையமும் சிறப்பாகவே உள்ளது.. அதுபோல, கமலின் அரசியலும் திமுகவுக்கு நம்பிக்கையை தந்துள்ளது..எனவே கூட்டணிக்கு நிறைய வாய்ப்பு உள்ளது. ஆனால், திமுகவில் பாமக இணைவது சந்தேகம்தான்... முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் தந்து அரசியல் செய்தாலும்கூட, தங்கள் கூட்டணியில் விசிக உள்ளதால், பாமகவை உள்ளே கொண்டு வர திமுக யோசிக்கும்.. அதேபோல, தேமுதிகவுக்கும் திமுக கூட்டணியில் வாய்ப்பு குறைவுதான்.. ஒருவேளை நிலைப்பாட்டில் சரியாக பேச்சுவார்த்தையை கொண்டுபோனால், ஓரளவு வாய்ப்பிருக்கிறது" என்றார்.

நெறஞ்ச மனசு
ஆனால், தேமுதிகவை நிச்சயம் கூட்டணிக்குள் திமுக சேர்த்து கொள்ளும் என்கிறார்கள்.. எம்பி தேர்தலில் திமுக கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிட்டால் தான், பலத்துடன் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்குள் முதல்முறையாக காலடி எடுத்து வைக்க முடியும் என்று கட்சிக்காரர்கள் மத்தியிலேயே பேசப்பட்டு வருகிறதாம்.. தொடர் தோல்வியால் துவண்டு கிடக்கும் தேமுதிகவுக்கு வருகிற பாராளுமன்ற தேர்தல் ஒரு சவாலாக அமையும் என்றும் சொல்கிறார்கள்.. அதற்காகவே, அந்த கட்சி, திமுக கூட்டணியில் இடம் பெற தூது விடும் என்ற நம்பிக்கையில் திமுக மேலிடமும் உள்ளதாம்.