பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்ட 1,381 கிலோ தங்கம்.. திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைப்பு
Recommended Video
சென்னை: சென்னை அருகே தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான 1,381 கிலோ தங்கம் திருப்பதி தேவஸ்தானத்திடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
ஆவடி அருகே வேப்பம்பட்டு சோதனைச் சாவடியில், கடந்த 17-ம் தேதி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். அப்போது அவ்வழியாக உரிய ஆவணங்கள் இன்றி லாரியில் கொண்டு செல்லப்பட்ட 1,381 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது பிடிப்பட்ட தங்கத்தை பூந்தமல்லி கருவூலத்தில் தேர்தல் பறக்குப் படையினர் ஒப்படைத்தனர்,

இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமானது என திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளித்தது. பின்னர் அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க உரிய ஆவணங்களை தேவஸ்தானம் வழங்கியது.
அந்த ஆவணங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 1,381 கிலோ தங்கம் தங்களுடைய தங்கம் தான் என தேவஸ்தான அதிகாரிகள் விளக்கம் அளித்திருந்தனர். மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் இந்த தங்கத்தை டெபாசிட் செய்திருந்ததாகவும் கூறியிருந்தனர்.
வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதற்கான தகுந்த ஆதாரங்களையும் உடன் சமர்ப்பிதிருந்தனர். இதனையடுத்து தங்கம் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 1,381 கிலோ தங்கம், திருப்பதி தேவஸ்தானத்திடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. பூந்தமல்லி கருவூலத்தில் இருந்த 1,381 கிலோ தங்கம், சாலை மார்கமாக வேன் மூலம் திருப்பதியில் உள்ள தேவஸ்தான கருவூலத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.
-
கிலோவுக்கு 1000000 தள்ளுபடி! 15% இறக்குமதி வரி.. இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் தங்கக் கடத்தல்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
நான் வந்துட்டேன்.. மீண்டும் கெத்தாக திரும்பிய தங்கம்! டாலரால் தலைகீழான மார்க்கெட்! அடுத்து என்ன? -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications