தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா.. தமிழக நிலவரம் என்ன.. பண்டிகை காலத்தால் மக்கள் மகிழ்ச்சி
சென்னை : தமிழகத்தில் 1,416 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 7.86 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் முற்றிலும் ஒழிந்து விட்டதால் பழையபடி மக்கள் தங்கள் இஷ்டத்திற்கு இருக்க முடியும் என்பதால் தமிழக கொரோனா அறிக்கையை ஆவலுடன் படித்து வருகிறார்கள்.
தமிழகத்தில் தினந்தோறும் மாநில சுகாதாரத் துறை சார்பில் 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட கொரோனா பாதிப்பு குறித்து தினமும் வெளியிடப்படுகிறது. அதன்படி கொரோனாவால் இன்று ஒரே நாளில் 1,416 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பரிசோதனை
இதுவரை தமிழகத்தில் 7,86,163 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 70,156 சேம்பிள்கள் சோதனை செய்யப்பட்டன. இதுவரை 1,22,64,069 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. அது போல் இன்று 69,685 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

ஆண்கள், பெண்கள்
இதுவரை 1,19,72,030 பேருக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என சோதனை செய்யப்பட்டது. இன்றைய நிலவரப்படி 10,988 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இன்று 841 ஆண்களுக்கும், 575 பெண்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுவரை 4,75,036 ஆண்களுக்கும், 3,11,093 பெண்களுக்கும், 34 திருநங்கைகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா
இதுவரை 67 அரசு பரிசோதனை மையங்கள், 157 தனியார் பரிசோதனை மையங்கள் என மொத்தம் 224 கொரோனா சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று மட்டும் 1,413 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை 7,63,428 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இன்று ஒரே நாளில் கொரோனாவால் 14 பேர் பலியாகிவிட்டனர். இதுவரை 11,747 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பலியாகிவிட்டனர்.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள்
12 வயதுக்குள்பட்டவர்களில் 14,371 ஆண் குழந்தைகளுக்கும் 13,385 பெண் குழந்தைகளுக்கும் என மொத்தம் 27756 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அது போல் 13 வயது முதல் 60 வயது வரை 396814 ஆண்களுக்கும், 260216 பெண்களுக்கும், 34 திருநங்கைகளுக்கும் என மொத்தம் 657064 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது போல் 60 வயதுக்குள் மேற்பட்டவர்களில் 63851 ஆண்களுக்கும், 37492 பெண்களுக்கும் என 1,01,343 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications