தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா?.. குறைஞ்சிகிட்டே வருது!.. கலக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழகத்தில் 1,428 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 7.84 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் முற்றிலும் ஒழிந்து விட்டதால் பழையபடி மக்கள் தங்கள் இஷ்டத்திற்கு இருக்க முடியும் என்பதால் தமிழக கொரோனா அறிக்கையை ஆவலுடன் படித்து வருகிறார்கள்.

தமிழகத்தில் தினந்தோறும் மாநில சுகாதாரத் துறை சார்பில் 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட கொரோனா பாதிப்பு குறித்து தினமும் வெளியிடப்படுகிறது. அதன்படி கொரோனாவால் இன்று ஒரே நாளில் 1,428 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பரிசோதனை

பரிசோதனை

இதுவரை தமிழகத்தில் 7,84,747 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 68,854 சேம்பிள்கள் சோதனை செய்யப்பட்டன. இதுவரை 1,21,93,913 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. அது போல் இன்று 68,388 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

ஆண்கள், பெண்கள்

ஆண்கள், பெண்கள்

இதுவரை 1,19,02,345 பேருக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என சோதனை செய்யப்பட்டது. இன்றைய நிலவரப்படி 10,999 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இன்று 897 ஆண்களுக்கும், 531 பெண்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுவரை 4,74,195 ஆண்களுக்கும், 3,10,518 பெண்களுக்கும், 34 திருநங்கைகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா

கொரோனா

இதுவரை 67 அரசு பரிசோதனை மையங்கள், 154 தனியார் பரிசோதனை மையங்கள் என மொத்தம் 221 கொரோனா சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று மட்டும் 1,398 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை 7,62,615 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இன்று ஒரே நாளில் கொரோனாவால் 11 பேர் பலியாகிவிட்டனர். இதுவரை 11,733 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பலியாகிவிட்டனர்.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள்

60 வயதுக்கு மேற்பட்டவர்கள்

12 வயதுக்குள்பட்டவர்களில் 14,353 ஆண் குழந்தைகளுக்கும் 13,345 பெண் குழந்தைகளுக்கும் என மொத்தம் 27698 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அது போல் 13 வயது முதல் 60 வயது வரை 396213 ஆண்களுக்கும், 259778 பெண்களுக்கும் என மொத்தம் 656025 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது போல் 60 வயதுக்குள் மேற்பட்டவர்களில் 63629 ஆண்களுக்கும், 37395 பெண்களுக்கும் என 1,01,024 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+