தமிழகத்தில் முதல்முறையாக ஒரே நாளில் 49 பேர் கொரோனாவுக்கு பலி- 1,515 பேருக்கு பாதிப்பு
சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் கொரோனாவுக்கு 49 பேர் பலியாகி உள்ளனர். இதில் 40 பேர் சென்னையில் மட்டும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை மட்டும் 1,515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் மகாராஷ்டிராவை தொடர்ந்து கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடத்தில் இருந்து வருகிறது. தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் 1,454 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
பிற நாடுகள், மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 61 பேருக்கும் கொரோனா உறுதியானது. இதனால் தமிழகத்தில் 24 மணிநேரத்தில் மொத்தம் 1515 பேருக்கு கொரோனா உறுதியானது.

மொத்த பாதிப்பு 48,019
இதில் ஆண்கள் 942 பேர் ; பெண்கள் 573 பேர். தமிழகத்தில் இதுவரை மொத்தமாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 48,019 ஆகும். கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 1438 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனையடுத்து தமிழகத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் எண்ணிக்கை 26,782 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 49 பேர் பலி
கொரோனாவால் இதுவரை இல்லாத அளவு தமிழகத்தில் முதல் முறையாக 49 பேர் மரணம் அடைந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 35 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 14 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கையானது 528 ஆக உயர்ந்திருக்கிறது.

சென்னையில் 919 பேருக்கு பாதிப்பு
மாவட்டங்களில் சென்னையில் 919 பேருக்கு கொரோனா உறுதியானது. கடந்த 2 வாரங்களில் முதல் முறையாக சென்னையில் 1,000க்கும் கீழே கொரோனா பாதிப்பு உள்ளது. பிற மாவட்டங்களில் நிலவரம்: செங்கல்பட்டு- 88; கோவை- 2; கடலூர்-10; தருமபுரி-2 ; திண்டுக்கல் - 13; கள்ளக்குறிச்சி- 7; காஞ்சிபுரம்- 46; கன்னியாகுமரி- 3; மதுரை- 20; நாகை-38; நாமக்கல் 3; பெரம்பலூர்-2; ராமநாதபுரம்- 18; ராணிப்பேட்டை- 60; சேலம்-2; சிவகங்கை- 2; தென்காசி-13; தஞ்சாவூர்-4; தேனி-4; திருவள்ளூர்-52; திருவண்ணாமலை-64; திருவாரூர்-9 ; தூத்துக்குடி-1; திருநெல்வேலி-11; திருப்பூர்-1; திருச்சி-14; வேலூர்-16; விழுப்புரம்- 18; விருதுநகர்-8;

சென்னையில் மொத்தம் 34,245
சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 34,245 ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டில் 3108; திருவள்ளூரில் 1945; காஞ்சிபுரத்தில் 803 ஆகவும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உள்ளது. திருவண்ணாமலையில் 768 பேரும் கடலூரில் 568 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்கிறது அரசு புள்ளி விவரங்கள்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications